மேலும் அறிய

Jobs Alert : சட்டம் படித்தவரா நீங்கள்? மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? எப்படி விண்ணப்பிப்பது..?

சட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரைட்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான  ரைட்ஸ் (Rail India Technical and Economic Service Limited, abbreviated as RITES ) என்றழைக்கப்படும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மினி ரத்னா நிறுவனத்தில் கீழ் இயங்கும் ரைட்ஸ் அலுவலகத்தில் துணை பொது மேலாளர் மற்றும் உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சட்டம் பயின்றிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

துணை பொது மேலாளார் ( Deputy General Manager (Legal))
உதவி மேலாளர் ( Assistant Manager (Legal))

கல்வித் தகுதி:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகள் சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும், சட்டத் துறையில் குறைந்தது ஒன்பது ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது அவசியம். 

ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு  ரூ.70,000 முதல்  2,00,000 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. 

வயது வரம்பு:

துணை பொது மேலாளர் பணிக்கு 50 வயதுக்கு மிகாமலும், உதவி மேலாளர் பணிக்கு 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

பணி அனுபவம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியல் உருவாக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க,  பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.600-யும் பட்டியல்/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ.300-யும் கட்டணமாக செலுத்த வேண்டும்.  விண்ணப்ப கட்டனத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

http://www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான கல்வி, பணி அனுபவ சான்றிதழ் உள்ளிட்டவற்றை அப்லோடு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது போதுமானது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2022

விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெறும் நாள் மற்றும் தேதி விவரங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேர்வுக்கான பாடத்திட்டம்:

இந்தத் தேர்வுக்கு எலக்டிசிட்டி சட்டம் உள்ளிட்ட சட்டம் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Jobs Alert : சட்டம் படித்தவரா நீங்கள்? மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? எப்படி விண்ணப்பிப்பது..?

இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://www.rites.com/Upload/Career/VC_No_56-57_22_pdf-2022-Sep-26-16-30-59.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.

மேலும் வாசிக்க..

IOCL Jobs: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

Indian Bank Jobs: இந்தியன் வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிப்பது எப்படி?

Indian Railway Jobs 2022: இந்திய ரயில்வே துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு-; விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திடீர் பரபரப்பு! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, பொன்முடி! புதிய அமைச்சர் யாரு?
திடீர் பரபரப்பு! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, பொன்முடி! புதிய அமைச்சர் யாரு?
IPL 2025 RCB vs DC: காப்பாற்றிய குருணல்.. கலக்கிய கோலி! டெல்லியை சிதைத்த ஆர்சிபி! உறுதியான ப்ளே ஆஃப்?
IPL 2025 RCB vs DC: காப்பாற்றிய குருணல்.. கலக்கிய கோலி! டெல்லியை சிதைத்த ஆர்சிபி! உறுதியான ப்ளே ஆஃப்?
IPL 2025 MI vs LSG: பயத்தை காட்டும் பல்தான்ஸ்.. லக்னோவை வாரி சுருட்டி அபார வெற்றி! மும்பைக்கு ஜே!
IPL 2025 MI vs LSG: பயத்தை காட்டும் பல்தான்ஸ்.. லக்னோவை வாரி சுருட்டி அபார வெற்றி! மும்பைக்கு ஜே!
Watch Video: பலத்தை பரிசோதித்த இந்தியா! அரபிக்கடலையே அதிரவைத்த சோதனை! வீடியோவைப் பாருங்க
Watch Video: பலத்தை பரிசோதித்த இந்தியா! அரபிக்கடலையே அதிரவைத்த சோதனை! வீடியோவைப் பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்TVK Vijay: ”உங்கள நம்புனேன் பாரு” விபூதி அடித்த பிரசாந்த் கிஷோர் இறங்க வந்த விஜய் | Vijay | EPSKashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM Modi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீர் பரபரப்பு! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, பொன்முடி! புதிய அமைச்சர் யாரு?
திடீர் பரபரப்பு! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, பொன்முடி! புதிய அமைச்சர் யாரு?
IPL 2025 RCB vs DC: காப்பாற்றிய குருணல்.. கலக்கிய கோலி! டெல்லியை சிதைத்த ஆர்சிபி! உறுதியான ப்ளே ஆஃப்?
IPL 2025 RCB vs DC: காப்பாற்றிய குருணல்.. கலக்கிய கோலி! டெல்லியை சிதைத்த ஆர்சிபி! உறுதியான ப்ளே ஆஃப்?
IPL 2025 MI vs LSG: பயத்தை காட்டும் பல்தான்ஸ்.. லக்னோவை வாரி சுருட்டி அபார வெற்றி! மும்பைக்கு ஜே!
IPL 2025 MI vs LSG: பயத்தை காட்டும் பல்தான்ஸ்.. லக்னோவை வாரி சுருட்டி அபார வெற்றி! மும்பைக்கு ஜே!
Watch Video: பலத்தை பரிசோதித்த இந்தியா! அரபிக்கடலையே அதிரவைத்த சோதனை! வீடியோவைப் பாருங்க
Watch Video: பலத்தை பரிசோதித்த இந்தியா! அரபிக்கடலையே அதிரவைத்த சோதனை! வீடியோவைப் பாருங்க
தோற்றத்தில் தான் எளிமை...ஏ ஆர் ரஹ்மானின் சொத்து மதிப்பு கேட்டால் மிரண்டு போவீங்க
தோற்றத்தில் தான் எளிமை...ஏ ஆர் ரஹ்மானின் சொத்து மதிப்பு கேட்டால் மிரண்டு போவீங்க
TVK Vijay: தவெக-வின் நம்பிக்கையான முதல் தலைமுறை வாக்காளர்கள்! விஜய்க்கு எதிராக திருப்ப ஸ்கெட்ச்?
TVK Vijay: தவெக-வின் நம்பிக்கையான முதல் தலைமுறை வாக்காளர்கள்! விஜய்க்கு எதிராக திருப்ப ஸ்கெட்ச்?
தி.மு.கவிற்கு எங்கள் கூட்டணியை கண்டு பயம் வந்துவிட்டது - ஆர்.பி.உதயகுமார்
தி.மு.கவிற்கு எங்கள் கூட்டணியை கண்டு பயம் வந்துவிட்டது - ஆர்.பி.உதயகுமார்
"வேறு எந்த நாட்டிலும் இல்லாத கருத்து சுதந்திரம்" பெருமிதத்துடன் சொன்ன ஜெகதீப் தன்கர்
Embed widget