Recruitment: அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; முழு விவரம் இதோ!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பின் முழு விவரம்.
அரியலூர் மாவட்டத்தின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. குழந்தை மனநல ஆலோசர் பணிக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்தத்தத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது. அரியலூரைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் இயங்கி வரும், அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு குழந்தை மனநல ஆலோசர் (Counsellor) பணிக்கு தற்காலிக பணியிடத்தினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இந்தப் பதவிக்கு மாதம் ரூ.18,536/- தொகுப்பூதியம் ஓராண்டு கால ஒப்பந்தத்திற்கு 40 வயதிற்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி / முதுநிலை பட்டதாரிகள் (10+12+3 Pattern) உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொது சுகாதாரம், வழிகாட்டுதல் உள்ளிட்ட படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும் அல்லது முதுநிலை பட்டயப்படிப்பு (PG Diploma in Counseling and Communication) பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்தப் பதவிகளுக்கு தேவையான ஆவணங்களுடன், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவி,
இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம்,
ஜெயங்கொண்டம் சாலை,
அரியலூர் - 621 704.
விண்ணப்ப படிவம் https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2022/08/2022083099.pdf என்ற லிங்க் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்.
கூடுதல் விவரங்களுக்கு https://ariyalur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணவும்.
விண்ணபிக்க கடைசித் தேதி:
16.09.202அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
பகுதி நேர துப்புரவாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு:
அரியலூரில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள 10 பகுதிநேர துப்புரவாளர்கள் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழின் எழுத பக்க தெரிந்திருக்க வேண்டும்,
வயது வரம்பு:
01.07.2022 தேதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோ, பிற்படுத்தட்டோர் (முஸனீம்) மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதா பிரிவினருக்கு 15 முதல் 30 பைதிற்குமிகாமல் இருக்க வேண்டும் அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு யைது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரியலூர் வட்டத்திலுள்ள விடுதிகளின் பகுதி நேர துப்புரவாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் மாதிரி விண்ணப்ப படிவத்தைப் பெற்று, அதில் சுய வைவரங்களை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சமர்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் புகைப்படம் இணைக்க வேண்டும்.
விண்ணபிக்க கடைசித் தேதி:
மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இயங்கும் மவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் 15.09.2022 பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.