மேலும் அறிய
விழுப்புரம் CMFC-யில் வேலை வாய்ப்பு! மேலாளர் & உதவியாளர் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் பொது சந்தை வசதி மையத்திற்கு (Common Market Facility Centre CMFC) உதவியாளர்) பணியிடங்களுக்கு பணியாளரை தேர்வு

மேலாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு பணியாளரை தேர்வு
Source : X
விழுப்புரம் : சுய உதவிக்குழு தயாரிப்புகளுக்கான பொது சந்தை வசதி மையம் (Common Market Facility Centre-CMFC) அமைக்க ஒரு மேலாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு பணியாளரை தேர்வு செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு பணியாளரை தேர்வு
விழுப்புரம் மாவட்டம் 2025-26ம் ஆண்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் பொது சந்தை வசதி மையத்திற்கு (Common Market Facility Centre CMFC) மேலாளார், உதவியாளர்) பணியிடங்களுக்கு பணியாளரை தேர்வுசெய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் செயலர் விழுப்புரம் மாவட்ட மகமை, மாவட்ட ஊரக வளர்ச்சி கட்டிட வளாகம், கீழ் தளம், 05.11.2025 முதல் 18.11,2025 வரை மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
CMFC மேலாளரின் தகுதி மற்றும் பங்கு :
பொருளாதாரம் வணிகம் சந்தைப்படுத்தல் துறையில் பட்டதாரியாக இருக்க வேண்டும். மேலும் தயாரிப்புகளின் மதிப்பு கூட்டல் பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்துதல் வழிகாட்டுதல் வழங்கும் திறன் பெற்றிருக்க வேண்டும் முதுகலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மதிப்பு கூட்டல் பேக்கிங் பேக்கேஜிங் பிராண்டிங் மற்றும் லேபிளிங் ஆகியவற்றிற்காக CMFC Facilitator ஆதான நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் திறன் மிக்கவராக இருக்க வேண்டும்.
CMFC சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளுக்கு அவற்றின் உற்பத்தி அளவிற்கு சந்தை ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். சுய உதவிக்குழு தயாரிப்புகளுக்கான சந்தைப்படுத்தல் வசதிகளை மேம்படுத்துவதில் உதவி செய்வதற்காக CMFC பல்வேறு தொழில்நுட்ப ஆதரவு நிறுவனங்கள் (TSA) திட்ட மேலாண்மை அலகுகள் (PMU) DSMS, SSMS ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்க வேண்டும். CMFC கண்காட்சிகள் சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் பிற சந்தைப்படுத்தல் விளம்பர நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் வாடிக்கையாளர் விருப்பத்தேர்வுகள், சந்தைப்படுத்தல் உத்திகள் குறித்த தனது ஒருங்கிணைக்க வேண்டும். Gem மின் வணிகம் சமூக ஊடகங்களில் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை விளம்பரபடுத்த வேண்டும் மற்றும் அத்தகைய சந்தைப்படுத்தல் தளத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளை வாகனங்கள் மூலம் சந்தைப்படுத்துதல் வீடு வீடாக சந்தைப்படுத்துதல் கண்காட்சிகள் மூலம் சந்தைப்படுத்துதல் ஆகியன குறித்து வழிகாட்ட வேண்டும்.
CMFC கணக்காளரின் தகுதி மற்றும் பங்கு:
வடிவமைப்பு மென்பொருள் இயக்கும் திறன் உள்ள பட்டதாரியாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்கள், காணொளி புகைப்படம் எடுத்தல் மற்றும் சுய உதவிக்குழு தயாரிப்புக்கான அவற்றின் மேம்பாட்டு கருவிகள் பற்றிய சிறந்த அறிவு இருக்க வேண்டும். கணினி உதவியுடன் பதிவேடு இருப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றை நிர்வகிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
தொடர்புக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலக தொலைபேசி எண்.04146 223736. மேலாளர், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் விழுப்புரம் தொலைபேசி 9787504035 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement





















