Job Alert:ரூ.58,600 வரை மாத ஊதியம்; தமிழில் எழுதப்படிக்க தெரிந்தால் போதும்; விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!
Jambukeswarar Temple Recruitment : திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வர் கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வர் கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்
- தட்டச்சர்
- உதவி மின்பணியாளர்
- காவலர்
- பெருக்குபவர்
மொத்த பணியிடம் - 7
பணி குறித்த கூடுதல் விவரம்
- தட்டர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது இளநிலை தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உதவி மின்பணியாளர் பணிக்கு எலக்ட்ரிக்கல் துறையில் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும்.
- காவலர், பெருக்குபவர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- தட்டச்சர் - ரூ.18,500-58,600/-
- உதவி மின்பணியாளர் ரூ.16,600-52,400/-
- காவலர் ரூ.15,900-50,400/-
- பெருக்குபவர் ரூ.15,900-50,400/-
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=25706 - மற்றும் https://hrce.tn.gov.in//hrcehome/index.php - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். திருவானைக்கோவிலில் உள்ள அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தைப் பெற்றுகொள்ளலாம். விண்ணப்பத்தை அஞ்சலிலும் அனுப்பலாம்; நேரில் அலுவலகத்திற்கு சென்றும் அளிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் பணியிடை வரிசை எண், மற்றும் - பணியிடத்திற்கான விண்ணப்பம்" என தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர் / செயல் அலுவலர். ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620005" என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இந்தப் பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
கவனிக்க...
- விண்ணப்பதாரர் 01.07.2023-ம் தேதி அன்று 18, வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
- ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
- விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் {Attested Xerox Copy Only)பெற்று அனுப்பப்பட வேண்டும்.
- தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் இத்திருக்கோயிலின் உபகோயில்களுக்கும், பணியிடமாறுதல் செய்யப்படுவார்.
- பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவைகள்:
- பிறந்த தேதியை சரிபார்க்க பள்ளி சான்று நகல்
- ஆதார்அட்டை நகல்
- இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க சாதி சான்றுநகல்
கல்வி சான்று நகல் (கலம் 11 மற்றும் 12 ல் உள்ளவாறு) - நன்னடத்தைச்சான்று (கலம் 14- ல் உள்ளவாறு)
- நன்னடத்தைச்சான்று (கலம் 15 ல் உள்ளவாறு)
- அனுபவ சான்று நகல்
- சுயவிலாசமிட்ட ரூ. 25 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் உறை ஒன்று.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்,
திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620005
விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.05.2023