ISRO Recruitment: இஸ்ரோவில் வேலை வேண்டுமா? டிப்ளமோ படித்திருந்தாலே போதும்..! விண்ணபிக்க நாளை கடைசி!
ISRO Recruitment: இஸ்ரோவில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த முழு விவரத்தையும் இங்கே காணலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Indian Space Research Organisation, ISRO)பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.தொழில்நுட்ப வல்லுநர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி. விண்ணப்பிக்க மறந்துடாதீங்க.
பணி விவரம்
- Technical Assistant
- Technician ‘B’,
- Draughtsman ‘B’,
- Heavy Vehicle Driver ‘A’,
- Light Vehicle Driver ‘A’
- Fireman -’A’
மொத்த பணியிடங்கள் - 63
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
- டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு மெக்கானிக்கல், எலக்ட்ரானிகஸ், எலக்ட்ரிக்கல், சிவில், கம்யூட்டர் சயின்ஸ் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்
- டெக்னிசியன் ‘பி’ பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஃபிட்டர், எல்க்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க அந்தந்த துறைகளில் ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஓட்டுநர் பணியிடத்திற்கு பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தது மூன்றாண்டுகள் ஓட்டுநராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
- கனரக வாகனம் ஓட்டுவதில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- ஃபையர்மேன் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
- Technical Assistant - Level 7 in the Pay Matrix ரூ..44900 - 142400/-
- Technician ‘B’ - Level 3 in the Pay Matrix ரூ.21700 - 69100/-
- Draughtsman ‘B’ - Level 3 in the Pay Matrix ரூ.21700 - 69100/-
- Heavy Vehicle Driver ‘A’ - Level 3 in the Pay Matrix ரூ.19900 - 63200/-
- Light Vehicle Driver ‘A’ - Level 3 in the Pay Matrix ரூ.19900 - 63200/-
- Fireman -’A’ - Level 3 in the Pay Matrix ரூ.19900 - 63200/-
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://career.iprc.gov.in/recruit/advt.jsp- என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு ரூ.750 மற்ற்ம் டெக்னிக்கல் பி, ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
பட்டியலின/ பழங்குடியின பிரிவினர்,முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்- 24.04.2023
தேர்வு தேதி, உள்ளிட்ட முக்கியமான கூடுதல் தகவலுக்கு இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.iprc.gov.in/iprc/files/careers/Detailed%20Notification%20English.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் காலை உணவுத் திட்டம்; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கோடை வெயிலின் தாக்கம்: திசையன்விளையில் கால்நடைகளுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து அசத்திய நாம் தமிழர்