IRMS Examination 2023: ஐ.ஏ.எஸ். தேர்வுடன் ரயில்வே தேர்வுகளும் சேர்ப்பு...! அதிகரிக்கும் பணியிடங்கள்..! தேர்வர்கள் மகிழ்ச்சி..
இந்திய ரயில்வே மேலாண்மை பணிகளுக்கான தேர்வானது, வரும் 2023 ஆம் ஆண்டு முதல் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் மேலாண்மை பணிகளுக்கான தேர்வானது, வரும் 2023ம் ஆண்டு முதல் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமை பணிகளுக்கான தேர்வுடன் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ரயில்வே மேலாண்மை ( Railway Management Service (IRMS) ) பணிகளுக்கான தேர்வை, இந்திய ரயில்வே துறையே நடத்தி வைத்து வந்தது.இதனால் குடிமை பணிகளுக்காக தேர்வு செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தேர்வுகள்:
இந்நிலையில் IRMS தேர்வானது, இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமானது, குடிமை பணிகளுக்கான முதல் நிலை தேர்வுடன்( preliminary exam) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாடத்திட்டமானது, ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான பாடத்திட்டமே இருக்கும்.
இரண்டாம் கட்ட தேர்வுக்கு 4 தாள்கள் இருக்கும், அதற்கான பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் தாள் - மொழி தேர்வு- 300 மதிப்பெண்கள், ( இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளை தேர்வு செய்து கொள்ளலாம்)
இரண்டாம் தாள் - ஆங்கில மொழி தேர்வு- 300 மதிப்பெண்கள்
3, 4ஆம் தாள் - விருப்ப பாடம் தேர்வு ( விருப்ப பாடங்களில் இருந்து ஏதேனும் இரண்டை விருப்பத்தின்படி தேர்வு செய்து கொள்ளலாம்
விருப்ப பாடங்கள்:
Civil Engineering,
Mechanical Engineering,
Electrical Engineering
Commerce and Accountancy
குறிப்பு: முதல் மற்றும் இரண்டாம் தாள்களுக்கான தேர்வானது தேர்ச்சி தேர்வாகும், இதில் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. மூன்றாம் மற்றும் நான்காம் தாள் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
குறைந்தபட்ச கல்வித் தகுதி - பொறியியல் பட்டம் / வணிகத்தில் பட்டம் / பட்டயக் கணக்கியல்( Degree in Engineering / Degree in Commerce/ Chartered Accountancy )
வயது: இப்பணிகளுக்கான வயது வரம்பானது, குடிமை பணிகளுக்கான தேர்வை ஒத்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வின் ஆண்டுத் திட்டத்தின்படி, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு - 2023, பிப்ரவரி ஒன்றாம் தேதி அறிவிக்கப்பட்டு, மே மாதம் 28 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது.
Also Read: CUTN Recruitment : தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு; முழு விவரம்!