மேலும் அறிய

Jobs Alert: காவல்துறையில் ஆய்வாளர், எஸ்ஐ, தலைமை காவலர் பணியிடங்கள்: விண்ணப்பிக்கலாம்- எப்படி?

50 வயதுக்குக்‌ கீழுள்ள முன்னாள்‌ ராணுவ வீரர்கள்‌/ முன்னாள்‌ துணை இராணுவப்படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முன்னாள்‌ இராணுவ வீரர்கள்‌/ முன்னாள்‌ துணை இராணுவப் படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

01.07.2024 நாளன்று 50 வயதுக்குக்‌ கீழுள்ள முன்னாள்‌ இராணுவ வீரர்கள்‌/ முன்னாள்‌ துணை இராணுவப்படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

என்ன பதவிக்கு?

தமிழ்நாடு காவல்துறையின்‌ வெடிகுண்டு கண்டறிதல்‌ மற்றும்‌ செயலிழக்கம்‌ பிரிவின்‌ கீழ்க்‌கண்ட பதவிகளில்‌ பணிபுரிய ஆட்கள் தேவை.

எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. அல்லது எஸ்‌.எஸ்‌.சி. தேர்ச்சி பெற்று, இராணுவம்‌ அல்லது துணை ராணுவப்‌ படைகளில்‌ குறைந்தபட்சம்‌ 10 ஆண்டுகள்‌ பணிபுரிந்து இருக்க வேண்டும்.

அதேபோல இராணுவம்‌, NSG, CAPF, CME / புனே, போன்றவற்றில்‌ வெடிகுண்டு கண்டறிதல்‌ மற்றும்‌ செயலிழக்கம்‌ பிரிவுகளால்‌ நடத்தப்படும்‌ பயிற்சியில்‌ தகுதி பெற்று இருப்பது அவசியம், இத்துறை மற்றும்‌ பிற தொடர்புடைய பிரிவில்‌ அறிவு மற்றும்‌ நடைமுறை அனுபவம்‌ ஆகிவை பெற்று இருக்க வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில்‌ வேலை

மேலும் தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ போதிய பயிற்சி அளிக்கும்‌ திறன்‌ பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில்‌ இந்த வேலை வழங்கப்படுகிறது. தேவைப்படின்‌ இது நீட்டிக்கப்படலாம்‌.

1) ஆய்வாளர்‌- BDDS  (முன்னாள்‌ சுபேதார்‌/ சுபேதார்‌ மேஜர்‌) - 7 பணியிடங்கள்‌

ஊதிய அளவு: ரூ.37,700- ரூ.11,95,000

 (1) உதவி ஆய்வாளர்‌- BDDS  (முன்னாள்‌ நாயிப்‌ சுபேதார்‌) - 21 பணியிடங்கள்‌

ஊதிய அளவு: ரூ.36,900- ரூ.1,16,600

(iii) தலைமை காவலர்‌- BDDS  (முன்னாள்‌ ஸஹவில்தார்‌ / நாயக்‌) - 36 பணியிடங்கள்‌

ஊதிய அளவு: ரூ.20,600- ரூ. 65,500

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியான விண்ணப்பதாரர்கள்‌ தங்களின்‌ சுய விவரங்களுடன்‌ (Biodata) கூடிய விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின்‌ நகல்களுடன்‌ அனுப்ப வேண்டும்‌.

காவல்‌ துறைத்‌ தலைவர்‌, செயலாக்கம்‌, மருதம்‌, எண்‌.17, போட்‌. கிளப்‌ சாலை, இராஜா அண்ணாமலைபுரம்‌, சென்னை- 28 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்‌. ஆவணங்களை தபால்‌ மூலம்‌ 14.11.2024 க்குள்‌ அனுப்ப வேண்டியது முக்கியம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள்‌ மட்டும்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ தேர்வு (எழுத்து மற்றும்‌ நடைமுறைத்‌ தேர்வுகள்‌) போன்றவற்றுக்கு தனிப்பட்ட அழைப்புக்‌ கடிதங்கள்‌ மூலம்‌ அழைக்கப்படுவார்கள்‌.

இந்த ஆட்சேர்ப்பு, விதிமுறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
Embed widget