IOB Recruitment : மாதம் ரூ.49,910 வரை ஊதியம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை; விவரம் இதோ!
IOB Recruitment : இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகளில் இந்த வேலைவாய்ப்பு மூலம் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த ஐ.டி. துறையில் திறம்பட செயல்படும் சிறப்பு அதிகாரி (F SPECIALIST OFFICERS - IT PROFESSIONALS) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு
பணி விவரம்:
Specialist Officer
மொத்த பணியிடங்கள் : 25
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் பொறியியல் துறையில் பிஇ, பி.டெக்., எம்.இ, எம்.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி., ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
சிறப்பு அதிகாரிகள் பணிக்கு 25 - 30க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு சலுகைகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை https://www.iob.in/upload/CEDocuments/IT_Specialist_ADVERTISEMENT-HRDD_2022-23.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஊதிய விவரம்:
மாதம் ரூ. 49,910 முதல் ரூ.69,810 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாகவும், பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணமா ரூ.100-யும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துது தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான அழைப்பு குறித்த அறிவிப்பு விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.iob.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.11.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.iob.in/upload/CEDocuments/IT_Specialist_ADVERTISEMENT-HRDD_2022-23.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.