TN Rain Alert: அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக இந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. இந்த பகுதி மக்கள் கவனிங்க..
அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக, பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செங்கல்பட்டு, மதுராந்தகம்,திருக்கழுகுன்றம், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர்பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-11-27-14:37:40 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மதுராந்தகம் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/kOpSXaluF3
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 27, 2022

மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 27, 2022
சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தாலும், வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை பொழிவு குறைவாகவே இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: மேட்டூர் அணையின் நீர் வரத்து 10,878 கன அடியில் இருந்து 11,051 கன அடியாக அதிகரிப்பு
Also Read: மதுரையில் கி.பி 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு