மேலும் அறிய

India Post GDS Recruitment 2023: 10-வது தேர்ச்சி போதும்..! தபால் துறையில் 12,828 பணியிடங்கள்; முழு விவரம்!

India Post GDS Recruitment 2023: இந்திய அஞ்சல் துறையில் 12,828 காலியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

இந்திய அஞ்சல் துறையில் 12,828 காலியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களுக்கானது.இதற்கு விண்ணப்பிக்க ஜூன் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு:

இந்தக் காலிபணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் கம்யூட்டர் உருவாக்கும் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுபவர்கள். பின்னர், அந்த மெரிட் லிஸ்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதனால்  பத்தாம் வகுப்பு தேர்வில் 460 அல்லது 400-க்கு மேல் எடுத்திருந்தால், நிச்சயமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:

Gramin Dak Servaks -கிராமின் தாக் சேவக் 

மொத்த காலியிடங்கள்: 12,828 பணியிடங்கள்

தகுதிகள்:

 அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணபிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு:

விண்ணப்பத்தாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விகிதங்களின்படி தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.indianpost.gov.in / https://indiapostgdsonline.gov.in -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள், மகளிர், Transwomen ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

India Post GDS Recruitment 2023: 10-வது தேர்ச்சி போதும்..! தபால் துறையில் 12,828 பணியிடங்கள்; முழு விவரம்!

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கு விண்ணப்பிப்பதற்கு அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கமான appost.in ற்கு சென்று அதில் கிடைக்கும் வழிகாட்டுதலை பின்பற்றினாலே போதும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று படி நிலைகள்,

  1. ரிஜிஸ்ட்ரேஷன் (பதிவு செய்தல்): முதலில் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பதிவு செய்து தனிப்பட்ட பதிவு எண்ணைப் (Unique Registration Number) பெற வேண்டும்.
  2. கட்டணம் செலுத்துதல் UR/OBC/EWS ஆகியவற்றில் ஆண்கள்/திருநம்பிகள் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தொகையை எடுத்துக்கொண்ட பின் எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் பதிலுக்காக 72 மணிநேரம் வரை காத்திருக்கலாம். எல்லா தலைமை தபால் அலுவலகத்திலும் நேரடியாக பணம் செலுத்தலாம்.
  3. ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தை நிரப்பவும். பின் ஆவணங்களைப் பதிவேற்றவும். பின்னர் அஞ்சல் அலுவலக விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும். உங்கள் விண்ணப்பத்தை சரி பார்த்து விட்டு, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும். இந்த மூன்று படிகளை முடித்தால், விண்ணப்பம் சமர்பிக்க பட்டுவிடும்.

இந்த லிங்க்கில் சென்று விண்ணப்பிக்கவும் https://www.appost.in/gdsonline/home.aspx.

கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தவர்களாக இருந்தால், https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Final_Post_Consolidation.pdf- என்ற லிங்கை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 

முழு அறிவிப்பிற்காக லிங்க-  https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf

மணடலங்கள் முறையே உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களுக்கு.. https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Final_Post_Consolidation.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Embed widget