Exim : பட்டதாரிகளா நீங்கள்? இந்திய எக்சிம் வங்கியில் காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளே பண்ணிடுங்க..
இந்திய எக்சிம் வங்கி பணிக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய எக்சிம் வங்கியில் காலியாக உள்ள 25 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும்,தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற மார்ச் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி ( Export – Import Bank of India (EXIM bank)அதாவது எக்சிம் வங்கி ஜனவரி மாதம் 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வங்கியின் மூலம் நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதோடு, அதிகமான இறக்குமதிக்குப் பணம் வழங்க ஐ.டி.பி.ஐ வங்கியின் சர்வதேச நிதித் துறையின் வேலைகளை எடுத்துக் கொண்டுள்ளது. மேலும் இதர நிறுவனங்களுக்கு தலைமை முகவராகவும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி இறக்குமதி நிதியமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலைகளையும் இவ்வங்கி மேற்கொண்டுவருகிறது. செய்து வருகிறது. இதோடு வணிக வங்கிகள் மற்றும் இதர ஏற்றுமதி இறக்குமதிப் பகுதிகளில் செயல்திட்டம் நடைமுறைப்படுத்துதல் மற்றும் நிதியளிப்பு வசதிகள் ஆகியவற்றை இவ்வங்கி செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி விதி 1981- ன் படி, வங்கிக் கடன் மற்றும் முன்பணம் ஆகியவற்றை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ மற்றும் வங்கி தன்னிச்சையாகவும் அல்லது வேறொரு வங்கியின் பங்கீட்டு நிதி நிறுவனத்துடனோ வழங்கிவருகிறது. இவ்வங்கி ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றிற்கு நிதியளிப்பதில் முதன்மை நிறுவனமாக விளங்கிவரும் நிலையில், பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்தியன் எக்சிம் வங்கியில் மேலாண்மை டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்
இந்திய எக்சிம் வங்கி பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 25
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் நிதியியல் பிரிவில் எம்பிஏ, பிஜிடிபிஏ தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். இதோடு சிஏ முடித்திருப்போரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் https://www.eximbankindia.in/ என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் அப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முழுமையாக படிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படை விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்துக்கொள்ளவேண்டும். இதோடு கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் ஆன்லைன் விண்ணப்பத்தோடு சேர்த்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ. 600.
மற்ற இதரப்பிரிவினருக்கு ரூ.100.
இதற்கான கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: மார்ச் 14, 2022
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.eximbankindia.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.