Indbank Recruitment: சென்னையில் வங்கி வேலை; மாதம் ரூ.45 ஆயிரம் ஊதியம் - முழு விவரம்!
Indbank Recruitment: இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank -ல் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 28-ம் தேதி கடைசி நாள்.
இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank -ல் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Indbank Merchant Banking Services Limited (Indbank)) என்ற நிதி நிறுவனத்தில் ஸ்டாக் ப்ரோக்கிங், மியூட்சுவல் ஃப்ண்ட விநியோகம், மெர்சென்ட் பேங்கிங், ரீடெயில் லோன் ஆலோசனை உள்ளிட்டவற்றை இந்த வங்கியில் நிர்வகித்து வருகிறது. இதில் சிஸ்டர் நெட்வோர்கிங் பிரிவில் பணி செய்ய தகுதியானவர்கள் வரும் 28-,ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்
Systems cum Surveillance Engineer
பணியிடம்
சென்னை அருகே நந்தனத்தில் உள்ள அலுவலகத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க இளங்கலை பொறியியல், பி.டெக்., கம்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிஸ், எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேசன் துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேசன் துறையில் முதுகலை படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நெட்வோர்க்கிங் துறையில் மூன்றாண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இதற்கு ஆண்டுக்கு ரூ.5.00-5.50 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது. (தோராயமாக மாத ஊதியம் ரூ.45,000/-)
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு சுயவிவர குறிப்புடன் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை இ-மெயிலிலும் அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி -recruitment@indbankonline.com
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Indbank Merchant Banking Services Limited (Indbank
# 480, 1st Floor, Khivraj Complex 1,
Anna Salai, Nandanam, Chennai 600035
விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.10.2023
பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலை
மத்திய பணியாளர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation) சென்னை அலுவலகத்தில் உள்ள 'Paramedical' பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
ஈ.சி.ஜி. டெக்னீசியன்
ஜூனியர் ரேடியோகிராஃபர்
ஜூனியர் மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட்
Pharmacist (Allopathic)
Pharmacist (Ayurveda)
Radiographer
மொத்த பணியிடங்கள் - 56
கல்வித் தகுதி:
- ஈ.சி.ஜி. பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். AICTE யின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாக இருக்க வேண்டும்.
- ஜூனியர் ரேடியாலஜி படிப்பிற்கு 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு ரேடியோகிராபியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- உதவியாளர் பணிக்கு 12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓ.டி. துறையில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- Pharmacist படிப்பிற்கு ஆயுர்வேத துறையில் ஃபார்மசி (Pharmacy in Ayurveda) துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Radiographer பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாவது மற்றும் 12-வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
- ஈ.சி.ஜி. டெக்னீசியன் - ரூ. 25,500 - ரூ.81,100/-
- ஜூனியர் ரேடியோகிராஃபர் - ரூ. 21,700- ரூ.69,100
- ஓ.டி. உதவியாளர் - ரூ. 21,700- ரூ.69,100
- Pharmacist (Allopathic) - ரூ.29,200 - ரூ.92,300
- Pharmacist (Ayurveda) -ரூ.29,200 - ரூ.92,300
- Radiographer - ரூ.29,200 - ரூ.92,300
- ஜூனியர் மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் - ரூ.29,200 - ரூ.92,300
தேர்வு செய்யும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்
விண்ணப்ப கட்டணம்
இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் உள்ளிட்டோருக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குயின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
https://www.esic.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.10.2023
முகவரி
ESI Corporation, Panchadeep Bhawan,
143, Sterling Road, Nungambakkam,
Chennai, Tamil Nadu – 600034.
வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல்