IIT Recruitment: எம்.டெக். முடித்தவரா? சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை - விண்ணப்பிக்கும் முறை! முழு விவரம்!
IIT Recruitment: சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரத்தை காணலாம்.
சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
குரூப் ஏ
டெக்னிக்கல் அதிகாரி (Technical Officer) - 8
குரூப் பி
Junior Technical Superintendent - 12
மொத்த பணியிடங்கள் - 20
கல்வித் தகுதி:
- குரூப் ஏ பிரிவில் விண்ணப்பிக்க எம்.டெக்., பொறியியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- Junior Technical Superintendent பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.டெக்., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
குரூப் ஏ - 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
குரூப் பி - 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், ட்ரேட் டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://recruit.iitm.ac.in/ - என்ற இணையதள முகவரியில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ள- recruit@iitm.ac.in
விண்ணபிக்க கடைசி தேதி - 24.04.2024 மாலை 05.30 மணி வரை
இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு https://recruit.iitm.ac.in/include/R424_Detailed_Advt.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..
AAI Recruitment:490 பணியிடங்கள்; இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
TNHRCE Recruitment: மருதமலை கோயிலில் வேலை! மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா? விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!