மேலும் அறிய

IBPS SO Recruitment 2024: வங்கிகளில் 884 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்; தொடங்கிய விண்ணப்பப் பதிவு- விவரம்!

IBPS SO Recruitment 2024: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ள வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரம் பற்றி இங்கே காணலாம்.

Institute of banking personnel selection CRP SPL-XII Recuitment: நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரிகள் ( Common Recruitment Process (CRP SPL-XII)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (institute of banking personnel selection) வெளியிட்டுள்ளது. வங்கியில் பணிபுரிய வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பணி விவரம்:

  • சிறப்பு அதிகாரி
  • ஐ.டி. அதிகாரிகள் (I.T. Officer (Scale-I))
  •  Agricultural Field Officer (Scale I)
  •  Rajbhasha Adhikari (Scale I)
  •  சட்டத்துறை அதிகாரி (Law Officer (Scale I))
  •  மனிதவள மேம்பாட்டு அதிகாரி (HR/Personnel Officer (Scale I))
  •  மார்க்கெட்டிங் அதிகாரி (Marketing Officer (Scale I))

பங்கேற்கும் வங்கிகள்:

பொத்துறை வங்கிகளுக்கான கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் உள்ள 884 சிறப்பு அதிகாரிகள் (SPECIALIST OFFICERS) காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

  • IT அதிகாரி பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் பொறியியல் துறையில் ( Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics &  Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Agricultural Field Officer பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்க்லை, கால்நடை மருத்துவம், மீனவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். (Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture) படித்திருக்க வேண்டும்.
  • Rajbhasha Officer பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்தி துறையில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். ஆங்கில மொழியிம் பயின்றிருக்க வேண்டும் அல்லது சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • Law Officer பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் பார் கவுன்சிலில் (The Bar Council of India ) பதிவு செய்திருக்க வேண்டும்.
  • HR/ Personnal Officer பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்  Personnel Management துறையில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும்.  Industrial Relations, HR / HRD/ Social Work / Labour Law இதில் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு கால முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • Marketing Officer பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ. (MMS (Marketing)/ MBA (Marketing)/ PGDBA / PGDBM/ PGPM/ PGDM (Marketing)) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

விண்ணப்பதாரர்  20 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850 செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினருக்கு ரூ.175 விண்ணப்ப கட்டணம். இதோடு ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்தப் பணிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.   முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

இதில் முதல்நிலைத் தேர்வுகள் வரும் நவம்பர் மாதமும் முதன்மைத் தேர்வுகள் டிசம்பரிலும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு 2025  பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், இந்த தேதிகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவைகள் மட்டுமே. இதில் மாற்றங்கள் இருப்பின் வங்கி பணியாளர்கள் தேர்வாணையம் அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம்:

IBPS SO Recruitment 2024: வங்கிகளில் 884 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்; தொடங்கிய விண்ணப்பப் பதிவு- விவரம்!

முதன்மைத் தேர்வுக்கான பாடத்திட்டம்:

IBPS SO Recruitment 2024: வங்கிகளில் 884 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்; தொடங்கிய விண்ணப்பப் பதிவு- விவரம்!

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.ibps.in/- அல்லதுhttps://www.ibps.in/index.php/specialist-officers/ - என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.08.2024

முக்கிய நாட்கள்:

IBPS SO Recruitment 2024: வங்கிகளில் 884 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்; தொடங்கிய விண்ணப்பப் பதிவு- விவரம்!

இது தொடர்பான கூடுதல் விவரங்களை காண https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Advt.-CRP-SPL-XIV_final-1.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு”  சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு” சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நோந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க.
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நோந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க.
Doctors Strike: அய்யய்யோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் - லட்சக்கணக்கான மக்கள் அவதி
Doctors Strike: அய்யய்யோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் - லட்சக்கணக்கான மக்கள் அவதி
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vignesh Mother | ’’ஒழுங்கா TREATMENT பாக்கலடாக்டர் தரக்குறைவா நடத்துனாரு’’விக்னேஷின் தாய் கதறல்Khalistani Terrorist attack Ram Temple | ”ராமர் கோயிலை இடிப்போம்”தேதி குறித்த தீவிரவாதிகள்Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி  கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு”  சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு” சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நோந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க.
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நோந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க.
Doctors Strike: அய்யய்யோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் - லட்சக்கணக்கான மக்கள் அவதி
Doctors Strike: அய்யய்யோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் - லட்சக்கணக்கான மக்கள் அவதி
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
காதலி பேசாத வேதனை! உயிரை மாய்த்துக் கொண்ட எம்பிபிஎஸ் மாணவர் - சென்னையில் சோகம்
காதலி பேசாத வேதனை! உயிரை மாய்த்துக் கொண்ட எம்பிபிஎஸ் மாணவர் - சென்னையில் சோகம்
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
Kanguva: பாபி தியோலின்
Kanguva: பாபி தியோலின் "அந்த" வீடியோ! கங்குவா படத்திற்குள் வந்தது இப்படித்தான்!
Icici Bank Credit Card: ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் இருக்கா? வங்கி வைத்த ஆப்பு, நாளை முதல் புதிய விதிகள் அமல்..!
Icici Bank Credit Card: ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் இருக்கா? வங்கி வைத்த ஆப்பு, நாளை முதல் புதிய விதிகள் அமல்..!
Embed widget