மேலும் அறிய

IB Recruitment 2022: மத்திய உளவுத் துறையில் 1,671 பணியிடங்கள்; 10-வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; விவரம் இதோ!

மத்திய உளவுத்துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு. எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த முழு விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய உளவுத்துறை அலுவலகத்தில் உதவி பாதுகாவலர் மற்றும் Multi-Tasking  உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. வாய்ப்பை தவற விட்றாதீங்க மக்களே!

இதன் மூலம் நாட்டின் அகமதாபாத், அமிர்தரசரஸ், பெங்களூரு, போபால், புவனேஷ்வர்,சண்டிகர், சென்னை, டேராடூன், புது டெல்லி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கல்கத்தா, லக்னோ, மும்பை, ராஞ்சி, நாக்பூர், பாட்னா, ஸ்ரீநகர், வாரணாசி, திருவனந்தபுரம், விஜயவாடா உள்ளிட்ட 37 மாநிலங்களில் உள்ள உளவுத்துறை அலுவகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளது. 

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி பாதுகாவலர் (Security Assistant/Executive (SA/Exe)) மற்றும்   Multi-Tasking உதவியாளர் (Multi-Tasking Staff/General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 1671 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி விவரம்:

Security Assistant/Executive (SA/Exe) 

 Multi-Tasking Staff/General (MTS/Gen)

பணியிடங்களின் எண்ணிக்கை : 1,671

உதவி பாதுகாவலர்

எண்ணிக்கை-1521

கல்வித் தகுதி :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மாநிலத்தின்அலுவல் மொழியில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

 25.11.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியின/ பட்டியலின பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளவு அளிக்கப்பட்டுள்ளது. 

IB Recruitment 2022: மத்திய உளவுத் துறையில் 1,671 பணியிடங்கள்; 10-வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; விவரம் இதோ!

IB Recruitment 2022: மத்திய உளவுத் துறையில் 1,671 பணியிடங்கள்; 10-வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; விவரம் இதோ!

மாத ஊதியம் விவரம்:

 இதற்கு ரூ. 21,700 முதல்  ரூ.69,100 வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.

Multi-Tasking Staff/General :

பணியிடங்கள் எண்ணிக்கை : 150

கல்வித் தகுதி : 

இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மாநிலத்தின்அலுவல் மொழியில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

25.11.2022 அன்று 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியின/ பட்டியலின உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதிய விவரம்:

மாதத்திற்கு ரூ. 18, 000 முதல் ரூ.56, 900 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதம் (Numerical ability) பொது அறிவு (General Awareness) பொதுப் பாடம் (General Studies) ஆகிய பிரிவுகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். ஒரு மணி நேரம் தேர்வு நடைபெறும்.

IB Recruitment 2022: மத்திய உளவுத் துறையில் 1,671 பணியிடங்கள்; 10-வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; விவரம் இதோ!

இரண்டாம் பகுதி மொழிபெயர்ப்பு கட்டுரை எழுதுதல். 500 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து உள்ளூர் மொழியிலும், உள்ளூர் மொழியிலிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க வேண்டும்.  40 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் தேர்வு நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mha.gov.in/ அல்லது https://www.ncs.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.11.2022

விண்ணப்பக் கட்டணம்:

தேர்வுக் கட்டணம் ரூ.50, விண்ணப்பக் கட்டணம் ரூ. 450. பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு உண்டு.

IB Recruitment 2022: மத்திய உளவுத் துறையில் 1,671 பணியிடங்கள்; 10-வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; விவரம் இதோ!

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mha.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

அறிவிப்பின் முழுவிவரத்திற்கான லிங்க் -https://drive.google.com/file/d/1f0ta3q73VY89_4L1XxXm3stz5hsdGK08/view

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget