Job Alert:10-வது, டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவரா? நீதிமன்றத்தில் பணி செய்ய வாய்ப்பு! முழு விவரம்!
Job Alert: நீதிமன்றத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை காணலாம்.
புதுச்சேரி நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்பு அறிவிப்பை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
பணி விவரம்
சீனியர் க்ரேடு ஸ்டெனோகிராபர் - 6
ஜூனியர் க்ரேடு ஸ்டெனோகிராபர் -9
மொழிபெயர்ப்பாளர்-2
ஜூனியர் க்ளார்க்-23
டைப்பிஸ்ட்-13
ஓட்டுநர்-1
பன்முக உதவியாளர்-20
கல்வித் தகுதி:
- ஸ்டெனோகிராபர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் Lower/ Higer/ Junior / Senior பிரிவு ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மொழிபெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில்
- ஜூனியர் க்ளர்க் பணிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஓட்டுநர் பணிக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- பன்முக உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்சிசி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
- சீனியர் க்ரேடு ஸ்டெனோகிராபர் - ரூ.35,400/-
- ஜூனியர் க்ரேடு ஸ்டெனோகிராபர் - ரூ.25,000/-
- மொழிபெயர்ப்பாளர்-ரூ.25,000/-
- ஜூனியர் க்ளர்க்-ரூ.19,900/-
- டைப்பிஸ்ட்-ரூ.19,900/-
- ஓட்டுநர்-ரூ.19,900/-
- பன்முக உதவியாளர்- ரூ.18,000/-
விண்ணப்ப கட்டணம்
ஓட்டுநர், பன்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு ரூ.750/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
மகளிர், பட்டியலின/ பழங்குடியின பிரிவினர்/ PwD, மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.mhc.tn.gov.in/recruitment/login- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2024
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
The Registrar General,
High Court of Madras,
Chennai - 600104
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%20No.50%20of%202024%20Puducherry%20Judicial%20Subordinate%20Service.pdf -என்ற இணைப்பைக் க்ளிக் செய்து காணலாம்.