Job Alert : டிகிரி படித்தவர்களா? ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த பணி; முழு விவரம் இதோ!
Job Alert : செங்கல்பட்டில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம்.
![Job Alert : டிகிரி படித்தவர்களா? ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த பணி; முழு விவரம் இதோ! government jobs chengalpattu various staff recruitment in urban health and wellness centre and phcs Job Alert : டிகிரி படித்தவர்களா? ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த பணி; முழு விவரம் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/fe5d3717b25e1dc6f7c7d910f2101df71673863888691333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக மருத்துவ அலுவலர், ஒப்பந்த செவிலியர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் உள்ள பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரம்:
- மருத்துவ அலுவலர்
- ஸ்டாப் நர்ஸ்
- MPHW
- உதவியாளர்
- RBSK பார்மாசிஸ்ட்
- டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
- டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் - NPBC
- MLHP
- அர்பன் ஹெல்த் நர்ஸ் - ANM
மொத்த பணியிடங்கள் - 55
கல்வித் தகுதி :
- மருத்துவ அலுவலர் பணிக்கு எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Staff Nurse பணிக்கு GNM / B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும்.
- MPHW (HI GrII) அறிவியல் பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் கண்டிப்பாகத் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Multipurpose Health Worker (Male) / HealthInspector / Sanitary Inspector Course ஆகிய பாடங்களில் இரண்டாண்டு கால படிப்பிற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.
- உதவியாளர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- RBSK Pharmacist Pharmacy பாடத்தில் டிகிரி/டிப்ளமோ/ Pharm. D உள்ளட்டவைகள் படித்திருக்க வேண்டும்.
- Data Entry Operator கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Computer applications பாடத்தில் ஓராண்டுகால முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
- Data Entry Operator (National programme for Blindness control) பணிக்கு கணினி அறிவியலில் இளங்கலை அல்லது ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்யூட்டர் அப்ளிகேசன் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- MLHP DGNM / B.Sc Nursing / B.Sc Nursing Urban Health Nurse/ANM ANM சான்றிதழ் இருப்பது கூடுதல் சிறப்பு.
ஊதிய விவரம் :
- Medical Officer -ரூ.60,000
- Staff Nurse- ரூ.18,000
- MPHW (HI GrII)- ரூ.14,000
- Support Staff - ரூ.8,500
- RBSK Pharmacist -ரூ.15,000
- Data Entry Operator -ரூ.13,500
- Data Entry Operator (National programme for Blindness control) - ரூ.13,500
- MLHP - ரூ.18,000
- Urban Health Nurse/ANM - ரூ.14,000
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு குறித்யு அறிவிப்பில் எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
https://chengalpattu.nic.in/- என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அலுவலகத்திற்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தைப் படிவத்தினை பெற: https://chengalpattu.nic.in/notice
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நல வாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
செங்கல்பட்டு மாவட்டம் - 603 001.
தொலைப்பேசி எண் : 044-29540261.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.02.2023 மாலை 5 மணி வரை
https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2023/01/2023011276.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்துகொள்ளலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)