GIC Recruitment 2024: மத்திய அரசு வேலை; ரூ.50 ஆயிரம் முதல் ஊதியம்- விண்ணப்பிப்பது எப்படி?
ஜிஐசி எனப்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (General Insurance Corporation of India) சார்பில் உதவி மேலாளர்கள் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வர்கள் டிசம்பர் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஜிஐசி எனப்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (General Insurance Corporation of India) சார்பில் உதவி மேலாளர்கள் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று (டிச.4) தொடங்கிய விண்ணப்பப் பதிவின் மூலம், இதில் 110 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஆர்வமும் தகுதியும் கொண்ட தேர்வர்கள் இதற்கு டிசம்பர் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஜிஐசி தெரிவித்துள்ளது.
முக்கியத் தேதிகள் என்னென்ன?
தேர்வர்கள் டிசம்பர் 19ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் எய்யலாம். விண்ணப்பத்தை ஜனவரி 3 வரை பதிவிறக்கம் செய்யலாம். டிசம்பர் 4 முதல் 19ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். ஹால் டிக்கெட் தேர்வு தேதிக்கு 7 நாட்கள் முன்னதாக வழக்கமாக வெளியிடப்படும்.
தேர்வு முறை எப்படி?
- எழுத்துத் தேர்வு
- குழு விவாதம்
- நேர்காணல்
- மருத்துவத் தேர்வு
ஊதியம் எப்படி?
தேர்வு செய்யப்படுவோர் உதவி மேலாளர் (Assistant Manager -Scale I Officers) ஆக பணி அமர்த்தப்படுவர். இவர்களுக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும்.
கல்வித் தகுதி என்ன?
- எந்தத் துறையாக இருந்தாலும் பட்டப் படிப்பு அல்லது முதுகலைப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களப் பெற்றிருக்க வேண்டும்.
- எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
- நவம்பர் 1, 2024-ன் படி, தேர்வர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- எனினும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வயது வரம்பில் விலக்கு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி? (Steps to apply for GIC Assistant Manager 2024 position)
- Step 1: gicre.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும்.
- Step 2: முகப்புப் பக்கத்தில், ‘Careers' என்ற தலைப்பை தேர்வு செய்யவும்.
- Step 3: GIC Assistant Manager Recruitment 2024 இணைப்பை எடுத்துக் கொள்ளவும்.
- Step 4: முன்பதிவை முடித்து லாகின் செய்யவும்.
- Step 5: விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவும்.
- Step 6: பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.