(Source: ECI/ABP News/ABP Majha)
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.. NCC அலுவலகத்தில் உதவியாளர் வேலை ரெடி!
NCC ல் டிரைவர் பணிக்கு ரூபாய் 19,500 முதல் 62 ஆயிரம் ரூபாய், மற்றும்அலுவக உதவியாளர் பணிக்கு ரூ.15700 முதல் 50ஆயிரம் வரை என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள தேசிய மாணவர் படை(NCC) அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு சமூகத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்று நினைக்கும் அனைத்து பெற்றோர்களும் பள்ளிப்பருவத்தில் இருந்த என்சிசியை தேர்வு செய்கின்றனர். இதன் மூலம் மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் சமூக பங்களிப்பு அதிகரிக்கிறது. இந்தியா முழுவதும் ஆர்வத்துடன் வரும் மாணவர்களுக்கென்றெ என்சிசி கேம்கள் செயல்பட்டுவருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் திருச்சி போன்ற பிற மாவட்டங்களில் உள்ள என்சிசி மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்படும். இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், திருச்சி என்சிசி அலுவலகத்தில் தற்போது அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன? விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி என்ன? என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.
NCC யில் டிரைவர் பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 2
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக மற்றும் கனரக வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும். இதோடு மோட்டார் வாகனத்தின் தற்போதைய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:
கல்வித்தகுதி – அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு – 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினரைத் தவிர இதரப்பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இந்த https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_office_assistant_0.pdf ற்றும் https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_office_assistant_0.pdf இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
NCC Group Headquartes,
NO4, 1st floor, Subramanian Building, Promenade Road,
Cantonment, Thiruchirappalli – 620001,
Tele : 0431 2461363
தேர்வு செய்யும் முறை: தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சம்பளம் –
NCC ல் டிரைவர் பணிக்கு ரூபாய் 19,500 முதல் 62 ஆயிரம்
அலுவக உதவியாளர் – ரூ.15700 முதல் 50ஆயிரம்
எனவே மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து தேசிய மாணவர் படை அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பினை பெறலாம்.