மேலும் அறிய

EPFO recruitment 2023: மத்திய அரசில் வேலை வேண்டுமா? 2,859 பணியிடங்கள்; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

EPFO recruitment 2023: பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரத்தினை இங்கே காணலாம்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (Employees' Provident Fund Organisation) உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (26.04.2023) கடைசி நாள். 

85 குரூப் சி ஸ்டெனோக்ராஃபர் பணியிடங்கள், அதோடு'Social Security Assistant’ பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது. 

பணி விவரம் :

Stenographer (Group C) -185

Social Security Assistant’ -2674

மொத்த பணியிடங்கள் -2859 

கல்வித் தகுதி: 

ஸ்டெனோக்ராஃபர், Social Security Assistant 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  கம்யூட்டரில் ட்ரான்ஸ்க்ரைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

இந்தப் பணிகளுக்கு  Level-4 in the Pay Matrix-இன் படி, ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Security Assistant பணிக்கு Level-5 in the Pay Matrix-ரூ. 29, 200 முதல் ரூ.92,300 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர். 

வயது வரம்பு :

இதற்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில்  அரசு விதிகளின் படி இடஒதுக்கீடு வழங்கப்படும். 

தேர்வு முறை:

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் திறனறிவுத் தேர்வு  ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

EPFO recruitment 2023: மத்திய அரசில் வேலை வேண்டுமா? 2,859 பணியிடங்கள்; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

முதல்நிலைத் தேர்வு

EPFO recruitment 2023: மத்திய அரசில் வேலை வேண்டுமா? 2,859 பணியிடங்கள்; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

ஆன்லைன் எழுத்துத் தேர்வில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் வழங்கப்படும். 

கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். 

மொத்தம் 800 மதிப்பெண் ஆன்லைன் எழுத்துத் தேர்வு இருக்கும். 

இதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் திறனறிவுத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

திறனறிவுத் தேர்வு

பத்து நிமிட டிக்டேட்சன் தேர்வு நடத்தப்படும். ஒரு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் கம்யூட்டரில் டைப் செய்ய வேண்டும். இதோடு ’Transcription’ தேர்வு நடைபெறும்.

தேர்வு மையங்கள்:

விண்ணப்பதாரர்களின் வசதிக்கேற்றவாறு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்ப கட்டணம் :

இதற்கு தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர்,மகளினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோரு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். யு.பி.ஐ., கிரெடிட் கார்ட், மாஸ்டர் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் கட்டணத்தை செலுத்தலாம். 

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/upsc/OTRP/index.php -என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.04.2023

முக்கிய அறிவிப்பு:

EPFO recruitment 2023: மத்திய அரசில் வேலை வேண்டுமா? 2,859 பணியிடங்கள்; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பு தேசிய தேர்வுகள் முகமை-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.upsc.gov.in/- விவரம் வெளியிடப்படும். இதற்கான தேர்வை தேசிய தேர்வுகல் முகமையின் கீழ் நடத்தப்படுகிறது. இரண்டு பணியிடங்களுக்கும் ஒரே முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.

ஊதிய விவரம், கல்வித் தகுதி உள்ளிட்டவைகள் குறித்த கூடுதல் / முழு விவரத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் https://recruitment.nta.nic.in/EPFORecruitment/File/ViewFile?FileId=1&LangId=P - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

Social Security Assistant- https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Advertisement_for_SSA_24032023.pdf - என்ற இணைப்பை காணலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget