Job Alert:ரூ.62,000 வரை மாத ஊதியம்; அரசு அலுவலகத்தில் வேலை;யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?விவரம்!
Job Alert: தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து விவரங்களை காணலாம்.
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலியாக உள்ள பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
ஈப்பு ஓட்டுநர்
பணியிடம்
அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
கல்வி மற்றும் பிற தகுதிகள்
விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வாகன ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
ஈப்பு ஓட்டுநர் - ரூ.19,500/- (13,500 -62,000)
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/01/2024011187.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் உள்ளிட்ட மேலதிக தகவல்களுக்கு https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/01/2024011174.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
கவனிக்க..
1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
4. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
5. சுய முகவரியுடன் கூடிய ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
வேலைவாய்ப்பு விவரங்களை காண https://dharmapuri.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் கூடுதல் தகவல்களை பெறலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.01.2024
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
அரூர்.
செங்கல்பட்டி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் காலியா உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
அலுவலக உதவியாளர்
கல்வி மற்றும் பிற தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
01.07.2023-ன் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இதற்கு அடிப்படை ஊதியமாக ரூ.15,700 வழங்கப்படும். சம்பள ஏற்றமுறையில் ரூ.50,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
- சுயமுகவரியுடன் கூடிய ரூ.30/- அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை (10X4 Inches Poatal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.
- தகுதியானவர்களுக்கு நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும். நேர்காணல் நடைபெறும் தேதி, இடம் பற்றி தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
ஆணையாளர்
ஊராட்சி ஒன்றியம்
திருப்போரூர்.
விண்ணப்பிக்க கடைசி நாள் - 08.02.2024
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2024/01/2024011116.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
IAF Recruitment 2024
இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு, அதாவது போர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி,6-ம் தேதி கடைசி நாளாகும். அதோடு, பணியிட தேவையை பொறுத்து பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..