Job Alert: எம்.பி.ஏ. தேர்ச்சி பெற்றவரா? அரசு வேலை - விண்ணப்பிக்கும் முறை - முழு விவரம்!
Job Alert: தமிழ்நாடு அரசின் வேளாண் துறையில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறையின் கீழ் செயல்படும் மாநில திட்ட கண்காணிப்பு பிரிவு (SPMU) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- பிஸ்சினஸ் அனலிஸ்ட் (Business Analyst)
- ஃபினான்சியல் அனலிஸ்ட் (Financial Analyst)
- அலுவலக உதவியாளர்
- ஹெல்ப் டெஸ்க் ஆப்ரேட்டர்
- தரவு உள்ளீட்டாளர்
- டைப்பிஸ்ட்
- கணக்காளர்
- நிர்வாக உதவியாளர்
மொத்த பணியிடங்கள் - 23
கல்வித் தகுதி
- பிசினஸ் அனலிஸ் பணிக்கு எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- ஃபினான்சியல் அனலிஸ்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எம்.பி.ஏ. ஃபினான்ஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வங்கி துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- க்ளரிக்கல் உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஹெல்ப் டெஸ்க் ஆப்ரேட்டர் பணிக்கு இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- தரவு உள்ளீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க கம்யூட்டர் சயின்ஸ் துறையில் இளங்களை பட்டத்துடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் டைப்ரைட்டிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (40 WPM in English and 30 WPM in Tamil.) இரண்டு ஆண்டு காலம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- கணக்காளர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.காம் படிப்பில் தேர்ச்சி பெற்று 10- ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- நிர்வாக அலுவலர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தற்காலிக பணியிடங்களுக்கான ஊதிய விவரம் ஏதும் அறிவிப்பில் குறிப்பிடப்பட வில்லை.
விண்ணப்பிக்கும் முறை
https://www.tnagrisnet.tn.gov.in/includes/noti/AF.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும். இதோடு, தேவையான கல்வித் தகுதி ஆவணங்களை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
“Application for SPMU for the post ……………….” என்ற அஞ்சல் உறையில் குறிப்பிட்டு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரங்கள் அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.03.2024
இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tnagrisnet.tn.gov.in/includes/noti/EQ.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.