![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CRPF Recruitment 2023: மாசம் ரூபாய் 1.12 லட்சம் சம்பளம்..! மத்திய அரசில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?
CRPF Recruitment 2023: மத்திய அரசின் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
![CRPF Recruitment 2023: மாசம் ரூபாய் 1.12 லட்சம் சம்பளம்..! மத்திய அரசில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி? CRPF Recruitment 2023: New vacancies announced for 212 constable posts, details here CRPF Recruitment 2023: மாசம் ரூபாய் 1.12 லட்சம் சம்பளம்..! மத்திய அரசில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/12/df8874040ac5459a384341c6a930335b1683893802158572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய அரசின் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் (The Central Reserve Police Force (CRPF) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
சி.ஆர்.பி.எஃப் இல் குரூப் ‘பி’ மற்றும் ’சி’காலியாக உள்ள 212 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பது பற்றி கீழே காணலாம். இது தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மே, 1- ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
- Sub-Inspector (RO) -19
- Sub-Inspector (Crypto) - 07
- Sub-Inspector (Technical) - 05
- Sub-Inspector (Civil) (Male)- 20
- Assistant Sub-Inspector (Technical) -146
- Assistant Sub-Inspector (Draughtsman) - 15
மொத்த பணியிடங்கள்: 212
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
- இதற்கு விண்ணப்பிக்க பத்தாவது அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி மற்றும் மருத்துவ தகுதி இருக்க வேண்டும்.
- கணிதம், வேதியியல், கம்யூட்டர் அறிவியல் ஆகிய துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- டெக்னிக்கல் பி.இ., பி.டெக் பணிக்கு எலக்ட்ரானிக்ஸ் அல்லது டெலி கம்யூனிகேசன் அல்லது கம்யூட்டர் அறிவியில் துறையில் இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- பொறியியல் துறையில் டிப்ளமோ படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அதோடு, மூன்றாண்டு கால டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பணிக்கு விண்ணப்பிக்க, 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமல் இருத்தக் கூடாது. அரசு விதிகளின் படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
- Sub-Inspector (RO) - ரூ.35,400 - ரூ.1,12,400
- Sub-Inspector (Crypto) - ரூ.35,400 - ரூ.1,12,400
- Sub-Inspector (Technical) - ரூ.35,400 - ரூ.1,12,400
- Sub-Inspector (Civil) (Male)- ரூ.35,400 - ரூ.1,12,400
- Assistant Sub-Inspector (Technical) - ரூ.29,200 - ரூ.92,300
- Assistant Sub-Inspector (Draughtsman) - ரூ.29,200 - ரூ.92,300
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக குரூப்-சி பணிக்கு ரூ.100 செலுத்த வேண்டும். குரூப் ‘சி’ ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், பெண்கள் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட டிஜிட்டல் முறையிலும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் கம்ப்யூட்டர் தேர்வுகளுக்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் சி.ஆர்.பி.எஃப் இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://crpf.gov.in/- என்பது அதிகாரப்பூர்வ வலைதள முகவரியாகும்.
இந்தப் பணி குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://crpf.gov.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
- இதற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான http://rect.crpf.gov.in/ -பக்கத்திற்கு செல்லவும்.
- ஹோம் பக்கத்தில் உள்ள ’ [Sub Inspector (Radio Operator/ Crypto/ Technical/Civil) & ASI (Technical/Draughtsman)-2023) ‘ என்பதை க்ளிக் செய்யவும்.
- தேவையான தகவல்களைப் பதிவிட்டு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
- விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வைத்துகொள்ளவும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி, முக்கியமான தேதிகள், தேர்வு தேதிகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://crpf.gov.in/ - என்ற இணையதள பக்கத்தில் வெளிவரும் அப்டேட்களில் தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.05.2023
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)