(Source: ECI/ABP News/ABP Majha)
CPRI Recruitment: மத்திய அரசுப் பணி; ரூ.1.12 லட்சம் வரை மாத ஊதியம்; எப்படி விண்ணப்பிப்பது? இதைப் படிங்க!
CPRI Recruitment: மத்திய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இங்கே காணலம்.
மத்திய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Power Research Institute (CPRI)) மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆகும். இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அலுவலகத்தின் போபால், ஐதராபாத், நாக்பூர், நொய்டா, கொல்கத்தா கெளவுகாத்தி மற்றும் நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் கிளை அலுவலங்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர் பணிக்கு அமர்த்தப்படுவர்.
பணி விவரம்:
- பொறியியல் அலுவலர் க்ரேட் 1
- சயின்டிஃபிக் உதவியாளர்
- பொறியியல் உதவியாளர்
- டெக்னிசியன்
- உதவியாளர்
மொத்த பணியிடங்கள்: 99
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- பொறியியல் அலுவலர் க்ரேட் 1 பணிக்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ECE பிரிவில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- பொறியியல் உதவியாளர் பணிக்கு எலக்ட்ரிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- சயின்டிஃபிக் உதவியாளர் பணிக்கு வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- டெக்னிசியல் பணிக்கு எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உதவியாளர் க்ரேட் -II பணிக்கு விண்ணப்பிக்க BA/ BSc. / B.Com/ BBA / BBM/BCA எதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்.
- பொறியியல் அலுவலர் க்ரேட் 1 - ரூ. 44,900 - ரூ. 1,42,400
- சயின்டிஃபிக் உதவியாளர் - ரூ.35,400 – ரூ.1,12,400
- பொறியியல் உதவியாளர் -ரூ.35,400 – ரூ. 1,12,400
- டெக்னிசியன் - ரூ.19,900 – ரூ. 63,200/
- உதவியாளர் க்ரேட் -II - ரூ.25,500 – ரூ. 81,100/-
வயது வரம்பு:
பொறியியல் அலுவலர் க்ரேட் 1 பணிக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மற்ற பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கபட்டுள்ள தளர்வு உள்ளிட்டவைகள் குறித்த முழு விவரத்திற்கு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://cpri.res.in/ - என்ற இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு, திறனறிவுத் தேர்வு, ட்ரேட் டெஸ்ட் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் மட்டுமெ கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்- 14.04.2023
இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://cpri.res.in/sites/default/files/Advertisement%20CPRI.01.2023%20English.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..