மேலும் அறிய

கோவை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் வேலை.. ஆர்வமுள்ளவர்கள் நேர்முகத்தேர்வுக்கு புறப்படுங்க..

நேர்முகத்தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்கள் கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள்,இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் போன்றவற்றை உடன் எடுத்துவர வேண்டும்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் செயல்பட்டுவரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநர், துணை சுகாதார செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வு வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் மக்களைப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிய நிலையில், இதனைச் சமாளிக்கும் விதமாக பல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது வரை ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது கோவை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கு என்னென்னத் தகுதிகள்? எப்படி இந்த பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

கோவை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் வேலை.. ஆர்வமுள்ளவர்கள் நேர்முகத்தேர்வுக்கு புறப்படுங்க..

பணியிட மற்றும் காலிப்பணியிட விபரங்கள்:

மருந்தாளுநர் – 1

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பதோடு தமிழ்நாடு பார்மஸி கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை சுகாதார செவிலியர்கள் – 7

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் துணை சுகாதார செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதுமட்டுமின்றி தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் – 5

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியில் சேர்ந்துப் பணியாற்ற விரும்பினால் வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும்  நேர்காணலில் பங்கேற்கலாம்..

இதில் தேர்வாகும் தகுதியான நபர்களை இப்பணியில் சேர்ந்துப் பணியாற்றமுடியும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி – ஏப்ரல் 12, 2022

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் – கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம்,

நேர்முத்தேர்வு நடைபெறும் நேரம் – காலை 10 மணி

கோவை மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்காக நடைபெறும் நேர்முகத்தேர்விற்கு வரும் நபர்கள் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்.

கோவை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் வேலை.. ஆர்வமுள்ளவர்கள் நேர்முகத்தேர்வுக்கு புறப்படுங்க..

கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள்

இருப்பிட சான்றிதழ்

ஆதார் அட்டை

சாதி சான்றிதழ்

இதோடு கொரோனா சமயத்தில் பணியாற்றியதற்கானச் சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே ஆர்வமுள்ள பட்டதாரிகள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget