Recuritment: +2 தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களா? மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! முழு விவரம்!
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரத்தை இங்கு காணலாம்.
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கு ( temporary vacancy of Assistant cum Data Entry Operator post on purely Contract basis ) பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி விவரம்:
உதவியாளருடன் இணைந்த கணினி அறிவு தெரிந்தவர். (Assistant cum Data Entry Operator )
கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி கல்வியில் டிப்ளமோ அல்லது பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். DCA முடித்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி பயன்படுத்துவதில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 10.11.2022 -இன் படி 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 10.11.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை https://Coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ சமர்ப்பிக்கலாம்.
இந்தப் பணிக்கு ஆஃப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
2வது தளம், பழைய கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர் – 641 018.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.11.2022
விண்ணப்ப படிவத்திற்கு https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/10/2022102033.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்
அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/10/2022102050.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த லிங்க்.. https://coimbatore.nic.in/notice/applications-are-invited-from-the-eligible-candidates-for-filling-up-the-temporary-vacancy-of-assistant-cum-data-entry-operator-post-on-purely-contract-basis-for-the-department-of-social-defense-co/
மேலும் வாசிக்க..
Watch Video: பசு மாட்டுக்கு கோ பூஜை செய்த இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்… வைரலாகும் வீடியோ!