மேலும் அறிய

CISF Recruitment 2022: 10-வது,+2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்;மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் வேலை; இதைப் படிங்க!

மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் வேலைவாய்ப்பு அறிவிப்பிற்கான முழு விவரம்.

மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 540 உதவி சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். 

 உதவி துணைக் காவல் ஆய்வாளர்( Assistant – Sub Inspector)  காவல்துறையின் தலைமை காவலர் (Head Constable – Ministerial) பணியிடங்கள் காலியாக உள்ளதென அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை தான் மத்திய தொழிற்பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2800 படை வீரர்களுடன், மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1983 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தும் உரிமை இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் உதவி சப் – இன்ஸ்பெக்டர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் அல்லது 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்ன தகுதி தேவை? என அறிந்துக்கொள்ளலாம்.

மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் உதவி சப் இன்ஸ்பெக்டர் பணிக்கானத் தகுதிகள்:

CISF Recruitment 2022: 10-வது,+2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்;மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் வேலை; இதைப் படிங்க!

பணி விவரம்:

உதவி துணைக் காவல் ஆய்வாளர்(Assistant – Sub Inspector) 

காவல்துறையின் தலைமை காவலர் (Head Constable – Ministerial)

கல்வித் தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

துணைக் காவல் ஆய்வாளர்( Assistant – Sub Inspector) :  5 லெவல் ஊதிய வரைவின் படி  ரூ. 29,200 முதல் ரூ.92,300 வரை, தலைமை காவலர் பதவிக்கு (Head Constable – Ministerial)  ஊதிய வரை 4-வது வரைவின் படி, ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என்று வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
 
தேர்வு செய்யப்படும் முறை:

உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், திறனறிவுத் தேர்வு நடத்தபடும். மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.  எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? 

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான  http://www.cisfrectt.in  என்ற லிங்கை கிளிக் செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இந்தப் பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2022

அறிவிப்பின் முழு விவரம் அறிய https://www.cisfrectt.in/file_open.php?fnm=LR5CuwC4YuUvW3UDDOrF1tnhXTKZwaED5CYkol-ogO9nCM3od0FsM8QdnYjNAxPd3ZjyNd0Afhc16xkIDQ6Oo-LN4VxEM2a0SdRcmceZMU1TrjeW6PcNledJnyDVts7i என்ற லிங்கை செய்து பார்க்கவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget