(Source: ECI/ABP News/ABP Majha)
Jobs Alert : சென்னை குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க தவறாதீங்க!
சென்னை குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரம்.
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பாதுகாப்பு அலுவலர், கணக்காளர், தகவல் பகுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த பணியிடஙகள் - 11
பணி மற்றும் ஊதியம் விவரம்:
பாதுகாப்பு அலுவலர்
ரூ.27,804 ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் (சமூகப்பணி / சமூகவியல் / குழந்தை மேம்பாடு/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல் / சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள முகமைத்துவம்)
இதனுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு / சமூக நலன் போன்ற களத்தில் கருத்திட்டங்களை உருவாக்குதல்/ அமல்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் என்பவற்றில் 2 ஆண்டு பணி அனுபவமும்/ கணினி தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா):
இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.27,804 வழங்கப்பட உள்ளது.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி / சமூகவியல் / குழந்தை மேம்பாடு/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல் / சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள முகாமைத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
சமூக நலன் துறையில் திட்டங்களை உருவாக்குதல், கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் ஆகியவற்றில் இரண்டாண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
(Legal Cum Probation Officer):
இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.27,804 வழங்கப்பட உள்ளது.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சமூக நலன் துறையில் திட்டங்களை உருவாக்குதல், கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் ஆகியவற்றில் இரண்டாண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
கணினி பயன்படுத்த தெரிந்திருக்க இருக்க வேண்டும்
வயது வரம்பு: 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
Counsellor:
இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.18,538 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல்/உளவியல்/ பொது சுகாதாரம் ஆலோசனையில் பட்டதாரி (அல்லது)
முதுகலை டிப்ளமோ படிப்பில் சைகாலஜி துறையில் கவுன்சிலிங் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சமூகப்பணியாளர் (Social Worker);
இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.18,538 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை சமூகவியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணக்காளர்(Accountant):
இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.18,538 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து வணிகவியல்- கணிதம் பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் துறையில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
கணினியில் தேர்ச்சி மற்றும் Tally பற்றிய அறிவு இருக்க வேண்டியது அவசியம்.
வயது வரம்பு: 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
தகவல் தொகுப்பாளர் (Data Analyst):
இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.18,538 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.C.A பட்டம் (புள்ளியியல்/கணிதம்/ பொருளாதாரம் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். .
பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு,
எண்.58, சூரிய நாராயணன் சாலை,
இராயபுரம், சென்னை-600 013.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான விண்ணப்பங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- 14.10.2022
https://cms.tn.gov.in/sites/default/files/announcement/tncpcr_160922.pdf என்ற லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ளலாம்.