Chennai Customs Recruitment: 10,12 முடித்தாலே போதும்.. மாத ஊதியம் ரூ.69,100.. சென்னை சுங்கத்துறையில் சூப்பர் வேலை...!
சென்னை சுங்கத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை ராஜாஜி சாலையில் சென்னை கஸ்டம்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரம்
- Halwai-Cum-Cook - 01
- Clerk - 01
- Canteen Attendant - 08
மொத்த காலி பணியிடங்கள் - 10
கல்வித்தகுதி
- ஹால்வாய் கம் குக் பணிக்கு 10ஆம் வகுப்பு முடித்திருப்பதோடு, டிப்ளமோ கேட்டரிங் படிப்புக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
- கிளர்க் பணிக்கு 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை வணிகவியல் பாடத்துடன் முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம், இந்தியில் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
- கேன்டீன் அட்டென்ட் பணிக்கு 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
மேற்கண்ட பணிகளுக்கு எல்லாம் வயது வரம்பானது 18 முதல் 25 வரை இருக்க வேண்டும். மேலும், அரசு விதிகளின்படி, ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும் தளர்வு அளிக்கப்படும்.
ஊதிய விவரம்
- Halwai-Cum-Cook - ரூ.21,700 முதல் 96,100 வரை
- Clerk - ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
- Canteen Attendant - ரூ.18,000 முதல் 56,900 வரை
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று https://chennaicustoms.gov.in/wp-content/uploads/2023/05/Application-Form-for-Canteen.pdf விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கல்வி சான்று, மதிப்பெண் சான்று, வயதுக்கான ஆவணம் உள்ளிட்ட விபரங்களுடன் போஸ்ட்டில் அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி
The Additional Commissiner Of Customs (Establishment) General Commissionerate,
Office Of The Principal Commissioner Of Customs,
Custom House, No.16, Rajaji Salai,
Chennai - 600 001.
விண்ணப்பிக்க கடைசி நாள் - 30.06.2023 மாலை 6 மணி வரை
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://chennaicustoms.gov.in/wp-content/uploads/2023/05/Recruitment-Notification-of-Canteen.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் படிக்க
Jobs: 44 பணியிடங்கள்; மாதம் ரூ.34,000 வரை மாத ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!