Chengalpattu Job Fair : செங்கல்பட்டில் வேலை தேடுபவர்களா நீங்கள்..? உங்களுக்கான அரிய வேலை வாய்ப்பு இதோ..!
chengalpattu job fair செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த மாதம் 23ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
சில ஆண்டுகளாகவே இளைஞர்களுக்கு படி வேலை கிடைக்கவில்லை என்ற ஏக்கம் இருந்து வருகிறது. இதனைப் போக்க அரசு சார்பிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பிலும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த மாதம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது இதை இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ( Mega Job Fair )
செங்கல்பட்டு ( Chengalpattu ) படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நான்காவது வெள்ளிக்கிழமை 23.06.2023 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ( Mega Job Fair ) நடைபெற உள்ளது.
இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை, நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
வயது வரம்பு ( Age )
வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 23.06.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை வெண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத், அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்