Canada Jobs : கனடாவில் கனவு வேலை.. வேலை தேடுவோருக்கான அட்டகாசமான செய்தி.. இதை படிங்க பாஸ்..
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
கனடாவில் மே 2021 முதல் காலியிடங்களின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. மே 2022க்கான தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி, பல்வேறு தொழில்துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பணியாளர்கள் வயதாகி, ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதால் கனடாவில் குடியேறுவதற்கான தேவை அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது.
இது, அதிக வேலை வாய்ப்பு விகிதத்திற்கு வழிவகுக்கிறது. தற்போது 2022 இல், மற்ற நாட்டிலிருந்து கனடாவுக்கு சென்று நிரந்தர குடியிருப்பாளராக அவர்களை பணியமர்த்த கனடா தயாராகி வருகிறது. இந்த எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக இருக்கும் வகையில் கனடா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான இலக்கு 4.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்குள் இலக்கு 4.5 லட்சத்துக்கும் மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலையின்மை குறைவாகவும், வேலை வாய்ப்புகள் ஏராளமாகவும் இருக்கும் இச்சூழ்நிலையில், புலம்பெயர்ந்தோர் காலி பணியிடங்களில் நிரப்ப வாய்ப்பு உள்ளது. எனவே, கனடாவில் நிரந்தர குடியிருப்பாளராக விண்ணப்பிக்க எக்ஸ்பிரஸ் என்ட்ரி திட்டத்தை பயன்படுத்த விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
மற்றொரு கணக்கெடுப்பின்படி, குறிப்பிட்ட மாநிலங்களில் முன்பை விட இப்போது அதிக காலி பணியிடங்கள் உள்ளன. ஆல்பர்ட்டா மற்றும் ஒன்டாரியோவில், ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு காலி பணியிடத்திற்கும் 1.1 பேர் மட்டுமே அதை நிரப்புவதற்கு உள்ளனர். இது மார்ச் மாதத்தில் 1.2 ஆகவும் முந்தைய ஆண்டை விட 2.4 ஆகவும் குறைந்துள்ளது.
நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடாரில் காலியாக உள்ள ஒவ்வொரு பதவிக்கும், சுமார் நான்கு வேலையில்லாதவர்கள் இருக்கின்றனர். தொழில்முறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சேவைகள், போக்குவரத்து மற்றும் கிடங்கு, நிதி மற்றும் காப்பீடு, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு, மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக காலியிடங்கள் இருக்கின்றன.
கட்டுமானத் துறையில் காலியிடங்கள் ஏப்ரல் மாதத்தில் 89,900 ஆக உயர்ந்துள்ளன. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட கிட்டத்தட்ட 45 சதவீதம் மற்றும் மார்ச் மாதத்தில் இருந்து 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மே மாதத்தில், நோவா ஸ்கோடியா மற்றும் மனிடோபா ஆகிய இரண்டிலும் விடுதி மற்றும் உணவு சேவை துறையில் 1,61 லட்சம் காலி பணியிடங்கள் இருக்கின்றன.
இவை 10 சதவீதத்திற்கும் அதிகமான காலி பணியிடங்களைக் கொண்டிருக்கின்றன. விடுதி மற்றும் உணவு சேவைத்துறை, தொடர்ந்து 13வது மாதமாக அதிக எண்ணிக்கையிலான காலியிடங்களைக் கொண்டுள்ளன. குறைவான மக்கள் பணியிடத்தில் நுழைவதற்கு ஆர்வமாக இருப்பதாலும், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதை விட்டு வெளியேறுவதாலும், கனடாவின் தொழிலாளர் சந்தை இந்த ஆண்டு வியத்தகு அளவில் குறைந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்