மேலும் அறிய

பாரதிதாசன் பல்கலைக்கழக பணிகள்.. விண்ணப்பிக்க இன்னும் 2 நாள்தான் இருக்கு..

Research fellowship பணிக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஸ்டைபன் வழங்கப்படும் எனவும், Guest Lecturer பணிக்கு அதிகபட்சமாக ரூ.16 ஆயிரம் என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்த 1982-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசனின் பொன்மொழிகளை ஏற்று செயல்பட்டு வரக்கூடிய பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகள் செயல்பட்டுவருகிறது. மேலும் இதில் அனுபவம் வாய்ந்த பல்வேறு பேராசிரியர்கள் பணியாற்றி வரக்கூடிய நிலையில் தற்போது  Research Fellowship, மற்றும் Guest Lecturer பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணிக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Research Fellowship, Guest Lecturer பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 4

கல்வித்தகுதி :

Research fellowship பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் பி.எச்டி முடித்திருக்க வேண்டும்.

அதேபோன்று Guest Lecturer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  அரசு அனுமதி பெற்றப் பல்கலைக்கழகங்களில் M.Sc Chemistry மற்றும் SLET/ NET/ Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், தங்களது சுய விபரங்கள் அனைத்தையும் எந்தவித தவறும் இல்லாமல் விண்ணப்படிவத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மேலும் இந்த விண்ணப்படிவத்தில் எந்தப்பணிக்கு என்பதைக் குறிப்பிட வேண்டும். மேலும் எந்தப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கிறோர்களோ? அதற்குரிய அனைத்துச்சான்றிதழ் நகலையும் விண்ணப்பத்தோடு இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதேப்போன்று Guest Lecturer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை டிசம்பர் 15 அதாவது இன்னும் 2 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:

Professor & Head, Department of Nonlinear

Dynamics, Bharathidasan University,

Tiruchirappalli–620 024

தேர்வு முறை:

மேற்கண்ட முறையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விபரம்:

Research fellowship பணிக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஸ்டைபன் வழங்கப்படும் எனவும், Guest Lecturer பணிக்கு அதிகபட்சமாக ரூ.16 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://drive.google.com/file/d/15TkVpZUJoAtb0J1Cmnvo_ZLYPb93kh7r/view மற்றும் https://drive.google.com/file/d/1iAoHuWdsAykRUHuTm7d7m8MS6uPG-sOg/view என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget