BEML Jobs: மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
BEML Limited: மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் 24 காலிப் பணியடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BEML Limited: மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்டில் ( BEML Limited) 24 காலிப் பணியடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (Bharat Earth Movers Limited) என்றழைக்கப்பட்ட மைனிங் நிறுவனத்தில் பணி செய்ய நல்ல வாய்ப்பு.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இன்று மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த 24 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
மெக்கானிக்கல் (Mechanical), எலக்ட்ரிக்கல் (Electricals), எலக்ட்ரானிக்ஸ் (Electronics), மனிதவள மேம்பாட்டு அதிகாரி பணி (Human resources).
காலி இடங்கள் - 24 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பொறியியல் பட்டப்படிப்பு
B.E/B.Tech in Mechanical/Electrical/Electronics படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வி தகுதியானது பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது. எனவே இந்த பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். https://uphesc.blob.core.windows.net/files/Management_Trainee_Technical_KP_S_05_2022.pdf
மனிதவள மேம்பாட்டு அதிகாரி பணிக்கு எம்.பி.ஏ. ( MBA (HR/IR)/ MSW or MA (Social Work with HR/IR) / Post Graduate Degree/ Diploma in Personnel Management & Industrial Relations) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
இந்த பணியிடங்களுக்கு நவம்பர் 6-ம் தேதிக்குள்( இன்று ) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.bemlindia.in/
வயது:
18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவுகளுக்கு 13 ஆண்டுளும் வயது வரம்பில் தளர்வு உள்ளது. முழு விவரங்களுக்கு விண்ணப்பத்தாரர்கள் இந்த அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். https://uphesc.blob.core.windows.net/files/Management_Trainee_Technical_KP_S_05_2022.pdf
வருமானம்:
இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூ. 40,000 - 1,40,000 ஊதியமாக வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த லிக்கை கிளிக் செய்ய வேண்டும். https://uphesc.blob.core.windows.net/files/Management_Trainee_Technical_KP_S_05_2022.pdf