Job Alert: பிரபல கல்லூரியில் ஆசிரியர் பணி; பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்- நேர்முகத் தேர்வு மட்டுமே!
Job Alert: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களை இங்கே காணலாம்.
அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரி (Arulmigu Palaniandavar College of Arts and Culture – APCAC) காலியாக உள்ள உதவி பேராசிரியர், அலுவலக உதவியாளர், தட்டச்சர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 6-ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
- உதவி பேராசிரியர்
- அலுவலக உதவியாளர்
- தட்டச்சர்
- துறை விவரம்:
- வணிகவியல்
- ஆங்கிலம்
- கணினி அறிவியல்
- தாவரவியல்
- சைவ சித்தாந்தம்
- வணிகவியல் தமிழ்வழிக்கல்வி பணியிடம்:
இதற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பணியமர்த்தப்படுவர்.
கல்வித் தகுதி:
- இதற்கு விண்ணப்பிக்க யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் சம்பந்தப்பட்ட துறை முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பி.எச்.டி. படித்திருக்க வேண்டும்.
- NET/ SLET/ SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- கணினி அறிவியல் பாடப்பிரிவில் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கவும்.
- தட்டச்சுப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து தட்டச்சு சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை https://apacwomen.ac.in/career/register.php - என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 06.08.2024 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
கல்லூரி முகவரி:
Arulmigu Palaniandavar College of Arts and Culture,
Palani, - 624 601
இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களை காண https://www.apacwomen.ac.in/ - என்ற இணைப்பில் காணலாம்.