JOB ALERT: கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு.! நாளை இன்டர்வியூக்கு வந்தாலே ஜாக்பாட்- மிஸ் பண்ணாதீங்க
வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் நிறுவனங்கள் மூலம் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இன்றும் நாளையும் 20ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இளைஞர்களுக்கு ஜாக்பாட்
தமிழகத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்து வருகிறது. அதிலும் சொந்த ஊரில் வேலை இல்லாத காரணத்தால் வெளியூர்களுக்கு வேலைக்கு தேடி செல்லும் நிலையில் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பை வழங்கிட திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. இதற்காக புதிய தொழில் முதலீடு மூலம் சென்னையில் மட்டும் தொழில் நிறுவனங்களை தொடங்காமல் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் முதலீட்டிற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
எனவே வேலைவாய்ப்புக்களை வழங்கிட ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை புதுக்கோட்டை, சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமின் மூலம் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் : 13.12.2025 சனிக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 3:00 மணி வரை
இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆலங்குடி
அனுமதி இலவசம்
சிறப்பு அம்சங்கள்
100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
10,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அன்றே பணி நியமன ஆணை வழங்கப்படும்.
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அரங்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை விண்ணப்பம் வழங்குதல்.
கல்வித்தகுதிகள்
எட்டாம் வகுப்பு முதல்பட்டப்படிப்பு வரை ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி பொறியியல்
வயது: 18 வயது முதல் 35 வயது வரை
கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்
இதேபோல கடலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்துகிறது.
நாள் : 13.12.2025 சனிக்கிழமை
நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 3:00 மணி வரை
இடம் : அரசு மேல்நிலைப்பள்ளி, மங்களூர், கடலூர் மாவட்டம்
அனுமதி இலவசம்
கல்வித்தகுதிகள்
எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல்
சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
இதேபோல சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து இன்று 12.12.2025 (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது . இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி), ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம் எனவும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















