AIASL Recruitment : ஏர் இந்தியாவில் வேலை வேண்டுமா...உடனே இதைப் பண்ணுங்க...முழு விவரம் உள்ளே...
சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்
சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான சேவை நிறவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் 309 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை அறிந்து கொள்ள https://www.aiasl.in/resources/AIASL%20Walk-in-Interview_Advt_Nov_2022_Chennai_31Oct22.pdf இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
பதவியின் பெயர்
வாடிக்கையாளர் சேவை அதிகாரி ( Customer Service Executive )
பயன்பாடு முகவர் மற்றும் ராம்ப் ஓட்டுநர் ( Utility Agent cum Ramp Driver )
பராமரிப்பு வேலை ( Handyman)
சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான சேவை நிறவனத்தில் 309 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் சேவை அதிகாரி( Customer Service Executive) பதவிக்கு 144 பணியிடங்களும், பயன்பாடு முகவர் மற்றும் ராம்ப் ஓட்டுநர் ( Utility Agent cum Ramp Driver) பதவிக்கு 15 பணியிடங்களும், பராமரிப்பு வேலை ( Handyman) பதவிக்கு 150 பணியிடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
- வாடிக்கையாளர் சேவை அதிகாரி ( Customer Service Executive) பதவிக்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பயன்பாடு முகவர் மற்றும் ராம்ப் ஓட்டுநர் (Utility Agent cum Ramp Driver) பதவிக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- பராமரிப்பு வேலை ( Handyman) பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.aiasl.in/resources/AIASL%20Walk-in-Interview_Advt_Nov_2022_Chennai_31Oct22.pdf
வயது
இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.aiasl.in/resources/AIASL%20Walk-in-Interview_Advt_Nov_2022_Chennai_31Oct22.pdf
தேர்வு முறை
இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்
- வாடிக்கையாளர் சேவை அதிகாரி ( Customer Service Executive) பதவிக்கு நவம்பர் 11 மற்றும் நவம்பவர் 12-ஆம் தேதியில் தேர்வு நடைபெறும்.
- பயன்பாடு முகவர் மற்றும் ராம்ப் ஓட்டுநர் (Utility Agent cum Ramp Driver) பதவிக்கு நவம்பர் 14-ஆம் தேதி தேர்வு நடைபெறும்.
- பராமரிப்பு வேலை ( Handyman) பதவிக்கு நவம்பர் 15 மற்றும் நவம்பர் 16-ஆம் தேதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.aiasl.in/resources/AIASL%20Walk-in-Interview_Advt_Nov_2022_Chennai_31Oct22.pdf
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்
Office of the HRD Department, Air Indian Unity Complex, Pallavaram Cantonment, Chennai - 600043 என்ற இடத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.