AIC Recruitment : அரசுப்பணி; மாதம் ரூ.60 ஆயிரம் ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
AIC Recruitment : இந்திய வேளாண் இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தை இங்கே காணலாம்.
முன்னணி பயிர்காப்பீடு நிறுவனமான இந்திய வேளாண் இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் (ஏ.ஐ.சி. -Agriculture Insurance Company of India Limited (AIC)) நிறுவனத்தில் நிதி மற்றும் முதலீடு பிரிவில் காலியாக உள்ள வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிங்களுக்கான தகுதிகள் என்னென்ன என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
பணி விவரம் :
மேனேஜ்மென்ட் டிரெயினி (நிதி மற்றும் முதலீடு)
மேனேஜ்மென்ட் டிரெயினி (Actuarial)
மொத்த பணியிடங்கள் - 20
கல்வித் தகுதி:
Actuaries பிரிவுக்கு விண்ணப்பிக்க ’Institute of Actuaries of India (IAI)’ கல்வி நிறுவனத்திலிருந்து படிப்பு முடித்திருக்க வேண்டும்.
நிதி மற்றும் முதலீடு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பட்டய கணக்கர் படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் வணிகவியல் பட்டம் முடித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
மாதம் ரூ.60,000 ஊதியமாக வழங்கப்படும்.
பயிற்சி காலம்:
இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ஓராண்டு காலம் பயிற்சி காலம். ஓராண்டு காலத்திற்கும் பயிற்சிக்கால ஊதியம் வழங்கப்படும்.
கவனிக்க.
பணி செயல்திறன் அடிப்படையில் பணி நிரந்தரம் குறித்து முடிவெடுக்கப்படும். அப்படியெனில், மாத ஊதியமாக ரூ.84 ஆயிரம் வழங்கப்படும்.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் எடுக்கப்படும் மதிப்பெண் குறித்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
www.aicofindia.com -என்ற இணைப்பு மூலம் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் :
வங்கி விவரம்:
முக்கியமான தேதி:
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.03.2023
விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பிற்கு https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeVVpxr_TMZiL9c3Yv23Eo6Q7Qifb8r2aSXV9BFTR6q2FGA1Q/viewform - க்ளிக் செய்யவும்.
தொடர்புக்கு- recruitmentother2022@gmail.com
மேனேஜ்மென்ட் டிரெயினி (Actuarial) பணிக்கான கூடுதல் விவரங்களுக்கு https://www.aicofindia.com/AICEng/General_Documents/Latest/MT%20-Actuarial-%20Advertisement_16022023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேனேஜ்மென்ட் டிரெயினி - அறிவிப்பிற்கான கூடுதல் விவரங்களுக்கு https://www.aicofindia.com/AICEng/General_Documents/Latest/MT%20-Finance-%20Advertisement_16022023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..