மேலும் அறிய

அக்னிவீர் வாயு திட்டத்தில் ஆள் சேர்ப்பு... முகாம் நடக்கும் இடம், தேதி குறித்து முழு விபரம் உள்ளே!!!

திருமணம் ஆகாத இளைஞர்களை ‘அக்னிவீர்வாயு’ திட்டத்தின் கீழ் சேர்ப்பதற்காக இந்திய விமானப்படை சென்னை தாம்பரத்தில் ஆட்சேர்ப்பு முகாமை நடத்துகிறது.

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா? தாம்பரத்தில் ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதுகுறித்த முழு விபரங்களுக்கும் இதோ உங்களுக்காக!!!

திருமணம் ஆகாத இளைஞர்களை ‘அக்னிவீர்வாயு’ திட்டத்தின் கீழ் சேர்ப்பதற்காக இந்திய விமானப்படை சென்னை தாம்பரத்தில் ஆட்சேர்ப்பு முகாமை நடத்துகிறது. இதில் வருகிற 27 மற்றும் 28-ந் தேதியில், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களுக்கு இந்த தேர்வுகள் நடக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 30 மற்றும் 31-ந்தேதிகளில் நடக்கிறது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஏனாம், அந்தமான்-நிகோபார் மற்றும் லட்சத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆண்களுக்கு செப்டம்பர் 2-ந்தேதி தொடங்கி 3-ந்தேதி வரை 2 நாட்கள் ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. செப்டம்பர் 5 மற்றும் 6-ந்தேதிகளில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெண் விண்ணப்பதாரர்கள் தகுதித்தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் ஆட்சேர்ப்புத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளில் அந்தந்த இடத்திற்கு நேரில் சென்று அந்த இடத்திலேயே விண்ணப்பிக்கலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்குமான தேர்வுகள் சென்னை, தாம்பரம், விமானப்படை நிலையத்தில் உள்ள, ஏர்மேன் தேர்வு மையத்தில் நடக்கிறது.

விண்ணப்பதாரர்கள், கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 2008-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதிக்குள் பிறந்தவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள். மத்திய, மாநில அல்லது யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் 10, பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

என்ஜினீயரிங் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கணினி அறிவியல், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி அல்லது தகவல் தொழில்நுட்பம்) பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இத்தகவல்களை பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget