மிக முக்கிய அறிவிப்பு.. மீன்வளத்துறையில் 600 பணியிடங்கள். ஆர்வமுள்ளவர்கள் ஜன.12-க்குள் விண்ணப்பிக்கவும்
சாகர் மித்ராக்கள் உள்ளூர் மீனவர்களுக்கிடையே அரசாங்கக் கொள்கைகள் வானிலை முன்னறிவிப்பு போன்ற விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்துகின்றனர்.
அரசிற்கும், மீனவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை மேம்படுத்தும் விதமாக தமிழக மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற ஜனவரி 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக உணவு வழங்குவதில் தமிழக மீன்வளத்துறை முக்கியப்பங்காற்றிவருகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற மீனவப்பிரச்சனைகளை சரிசெய்து வருவதில் மீன்வளத்துறை முக்கியப்பங்காற்றிவருகிறது. இந்நிலையில் தற்போது அரசாங்கத்திற்கும், மீனவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை மேம்படுத்தும் விதமாக தமிழக மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கடலோர மாவட்டத்திற்கு அருகாமையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ள நிலையில், வேறு என்ன தகுதி? தேவை என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்ளலாம்
மீன்வளத்துறையில் சாகர் மித்ரா பணிகளுக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 600
கல்வித்தகுதி – தமிழக மீன்வளத்துறைக்கு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், மீன்வளத்துறையில் மீன்வள அறிவியல், கடல் உயிரியியல், விலங்கியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் மீன்வளத்துறை சாகர் மித்ரா பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில் முதலில், https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_-_Notification.pdf இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் விண்ணப்படிவத்துடன், கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களுடன், உங்களது பகுதிக்கு அருகாமையில் உள்ள கடற்கரையோர மாவட்டங்களின் இணை இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்திற்கு வருகின்ற ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : ரூ.10,000 + 5,000
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பித்து, சாகர் மித்ரா பணிக்கு தேர்வானவர்களுக்கு கீழ்க்கண்ட முறைகளில் பணியாற்ற அறிவுறுத்தப்படுவார்கள்.
பொதுவாக மீன்வளத்துறையில் சாகர் மித்ராக்களாக நியமிக்கப்படுபவர்கள், அரசாங்கத்திற்கும் இடையே உள்ள இடைமுகமாக செயல்படுவார்கள். மேலும் இவர்கள் மீனவர்கள் மற்றும் எந்தவொரு கடற்பரப்பிற்கும் தொடர்புக் கொள்ளும் முதல் நபராக செயல்படுவார்கள். இதோடு மீன்வளம் மீன்வளம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் மீனவர்களின் சேவைகள் இவர்களின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
மேலும் சாகர் மித்ராக்கள் உள்ளூர் மீனவர்களுக்கிடையே அரசாங்கக் கொள்கைகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வானிலை முன்னறிவிப்பு, சாத்தியம் பற்றிய தகவல்களைப் பரப்புவது, மீன்களை சுகாதாரமாக கையாள்வது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_- _Notification.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.