Sesame Oil Benefits : நல்லெண்ணெய் தரும் நன்மைகள்.. குளிர்காலத்தில் இதை இப்படி யூஸ் பண்ணிக்கோங்க..
பெயருக்கு ஏற்றதுபோலவே நல்லெண்ணெய் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் தருவதாக உள்ளது. உள்ளிருந்து உடலை உறுதி செய்வதுபோல் வெளியே சருமப் பராமரிப்புக்கும் நல்லெண்ணெய் தரும் நன்மைகள் ஏராளம்.
பெயருக்கு ஏற்றதுபோலவே நல்லெண்ணெய் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் தருவதாக உள்ளது. உள்ளிருந்து உடலை உறுதி செய்வதுபோல் வெளியே சருமப் பராமரிப்புக்கும் நல்லெண்ணெய் தரும் நன்மைகள் ஏராளம்.
புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பு:
நல்லெண்ணையில் அதிக அளவில் ஆன்ட்டிஆக்ஸிடன் ட்ஸ் இருக்கிறது. இது ஃப்ரீ ரேட்டிக்கல்ஸின் பக்கவிளைவுகளை குறைக்கும். புற ஊதாக் கதிர்கள் சருமத்தை ஊடுருவாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாது சூரிய வெப்பத்தினால் ஏற்படும் சன்பர்ன் எனப்படும் அலர்ஜியை குணப்படுத்த உதவுகிறது. நல்லெண்ணெய்யில் ரேடியோ கதிர்களை தாக்குப்பிடிக்கும் சக்தி உள்ளது. அதனால் 30% புற ஊதா கதிர்களை கட்டுப்படுத்துகிறது.
கரும்புள்ளிகள் சிகிச்சை:
நல்லெண்ணெய்யில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணநலன்கள் ப்ளாக்ஹெட்ஸ், ஒயிதெட்ஸ், மற்றும் சில பிடிவாதமான கரும்புள்ளிகளை அகற்றுகிறது.
வறண்ட சருமத்திற்கு தீர்வு:
நல்லெண்ணெய் வறண்ட சருமத்திற்கு நல்ல சிகிச்சையாக அமைகிறது. இதில் உள்ள லைனோலீக் அமிலமும், ஃபேட்டி அமிலமும் வறண்ட சருமத்திற்கு புத்துயிர் தருகின்றன. சருமத்தின் மீது ஒரு பாதுகாப்பு அரண் போல் அமர்ந்து ஈரப்பதத்தை உறிந்து கொள்கிறது. இதனால் சருமத்திற்கு பொலிவு கிடைக்கிறது. மேலும் சருமம் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கச் செய்கிறது.
சருமத்தின் பிஎச் வேல்யூவை (காரத்தன்மை) பாதுகாக்கிறது
நல்லெண்ணெயில் பாலிஃபீனால்ஸ் உள்ளது. இது சருமத்தின் இயற்கையான பிஎச் பேலன்ஸை பேணுகிறது. இதனால் சருமம் மிகவும் வளவளப்பாகவும் இல்லாமல் மிகுந்த வறட்சியும் இல்லாமல் இருக்கும்.
சருமத்தில் டேனிங் ஏற்படாமல் பாதுகாக்கிறது
ஸ்கின் பிக்மென்டேஷன் எனப்படும் சருமத்தின் நிறம் மாறுதல் தடுக்கப்படுகிறது. அதிக வெயில், அதீத குளிரால் ஸ்கின் டேன் ஆகக் கூடும். நல்லெண்ணெய் வெயில் காலத்தில் சன்ஸ்க்ரீனாக பயன்படுகிறது. ஃபுட் சயின்ஸ் மற்றும் பயோ டெக்னாலஜி துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் நல்லெண்ணெய்யில் சருமத்தை வென்மையாக்கும் குணநலன் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மெலனின் பயோ சின்தஸிஸ் என்ற ப்ராசஸை தடுப்பதால் நல்லெண்ணெய் பயன்படுத்தும் போது சருமம் வென்மையாக பொலிவுடன் காணப்படுகிறது.
இறந்த செல்களை அகற்றுகிறது:
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தில் சேர்ந்த சீபம் படிமங்கள், இறந்த செல்கள் இன்னும் பிற அழுக்குகளை அகற்றுகிறது. சருமத்தின் துகள்களில் இருந்து எண்ணெய்யில் கரையக்கூடிய நச்சுக்கள் அகற்றப்படுகின்றன. இது சருமத்தின் பொலிவை மேம்படுத்தி அதனை மிருதுவாக்குகிறது.
இதுதவிர நல்லெண்ணெய்யில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். நல்லெண்ணெயை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் குடித்தும் வரலாம்.
நல்லெண்ணெய் மற்றும் மூலிகை குடிநீர் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால், உமிழ் நீரின் காரதன்மை பாதுகாக்கப்படும். மேலும் அதில் உள்ள மருத்துவ மூலக்கூறுகள் வாயில் உள்ள மென் திசுக்கள் மூலமாக உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலந்து செயல்பட தொடங்கும். தினமும் பதினைந்து மில்லி நல்லெண்ணெய்யை வாயில் இட்டு பத்து நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள அழுக்குகள், பல்லுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்கள் போன்றவை வெளியேறிவிடும். மேலும் தொண்டை வறட்சி, நாவறட்சி, வாய்புண், நாக்கில் உண்டாகும் புண்கள், உமிழ் நீர் குறைவாக சுரத்தல் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )