உடலுறவின்போது இது நல்லது.. ஏன் தெரியுமா?
உடலுறவில் ஒருவருக்கு ஒருவர் கிளர்ச்சி அதிகரித்து முத்தத்தில் தொடங்கி நகங்கள், பற்கள் என ஒருவர் மீது ஒருவர் பதியத் தொடங்கும்போது தன்னிச்சையாகவே முனகல் எழுந்தால்...
'இன்று செக்ஸ் எனக்குப் பிடித்திருந்தது’ எனப் பார்ட்னரிடம் சொல்லும்போது இருவருக்கும் இடையில் நெருக்கத்தை அதிகரிக்கும். ஆனால் அப்படிச் சொல்பவர்கள் மிகமிகக் குறைவு. மனதிலிருந்து காண்ஃபிடண்ட்டாக தனது பார்ட்னருடன் செக்ஸ் குறித்துப் பேசத் தயங்குபவர்களுக்கு முனகல்தான் சிக்னல்.
பெண்ணோ, ஆணோ, மாற்றுப்பாலோ, பார்ட்னர்களில் ஒரு சிலர் செக்ஸின்போது பூனை போல முனகுவார்கள் அல்லது கத்துவதற்குக் கூட வாய்ப்பு உண்டு. உடலுறவில் ஒருவருக்கு ஒருவர் கிளர்ச்சி அதிகரித்து முத்தத்தில் தொடங்கி நகங்கள், பற்கள் என ஒருவர் மீது ஒருவர் பதியத் தொடங்கும்போது தன்னிச்சையாகவே முனகல் எழுந்தால் உங்கள் பார்ட்னருக்கு அந்த செக்ஸில் மகிழ்ச்சி என உணர்ந்துகொள்ளலாம். இப்படி முனகுவது எதனால்? பொய்யாக முனகுவதை எப்படிக் கண்டறிவது? (Fake Moaning), முனகுவதும் பார்ட்னருக்குக் கிளர்ச்சியூட்டுவதாக இருக்குமா? முனகுதல் குறித்த இப்படியான பல சந்தேகங்களை பாலியல் நிபுணரிடம் கேட்டறிந்தோம்.
செக்ஸின்போது ஏன் முனகுகிறார்கள்?
உடலுறவில் நீங்கள் கிளர்ச்சி அடையத் தொடங்கும்போது உடலின் மீதான உங்கள் கட்டுப்பாடு குறைந்து நரம்புகளும் தசைகளும் சற்றுத் தளர்வடையத் தொடங்கும், அப்படி தளர்வடையத் தொடங்கும்போது இயல்பாகவே முனகல் எழும். ஒருசிலர் செக்ஸில் தன் பார்ட்னரைவிட தான் சிறந்தவர் எனக் காட்டிக் கொள்வதற்காகவும் முனகுவார்கள்.
சிறந்த செக்ஸுக்கான பச்சை விளக்கா?
செக்ஸில் ஒருவர் முனகுகிறார் என்பது சிறந்த செக்ஸுக்கான பச்சை விளக்கு என்கிறார் பாலியல் நிபுணர்.உங்கள் பார்ட்னருடனான உங்கள் செக்ஸ் கெமிஸ்ட்ரி சீராக இருக்கிறது என்பதற்கான சிக்னல் இந்த முனகுதால். அதே சீரில் உடலுறவைத் தொடர்வது இருவருக்குமே மகிழ்ச்சியானதாக்கும்.
உங்கள் முனகுவதை வைத்து செக்ஸை மேலும் மகிழ்ச்சியானதாக்குவது எப்படி?
உங்கள் பார்ட்னர் முனகுவதைக் கொண்டு செக்ஸில் அவருக்கு உங்கள் செயல்பாட்டில் பிடித்தது எது பிடிக்காதது எது என்பதை அவர் சொல்லாமலேயே கூடக் கண்டறியலாம். முனகுவதை நல்ல செக்ஸுக்கான அளவுகோலாக வைத்துக் கொள்ளலாம். செக்ஸில் பழகப் பழக உங்கள் பார்ட்னர் உண்மையாகவே முனகுகிறாரா அல்லது பொய்யாக முனகுகிறாரா? என்பதைக் கண்டறியலாம். அதற்கு ஏற்றது போல நீங்கள் செயல்படும் நிலையில் உங்கள் இருவருக்கும் இடையிலான செக்ஸ் ரீதியான பலதடைகள் உடைய வாய்ப்பு உண்டு.
முனகுதல் உச்சமடைய வைக்குமா?
சினிமாவில் பெரும்பாலான காட்சிகள் முனகும்போது உச்சமடைவது போலக் காட்டப்பட்டிருக்கும். ஆனால் அது உண்மையா? ஆம் என்கிறார் பாலியல் நிபுணர் ஏங்கல். பார்ட்னர்கள் இருவரும் முனகத் தொடங்கும்போது ஒருவர் முனகலுக்கு ஏற்ப மற்றொருவது உடல் இசைந்துகொடுக்கத் தொடங்கும். இசைந்து கொடுக்கும்போது தானாகவே உடல் தளர்ந்து உச்சமடையத் தொடங்கும் என்கிறார் அவர்.
முனகுதல் உங்கள் பார்ட்னருக்குப் பிடிக்குமா?
செக்ஸில் சத்தமிடுவது சிலருக்குப் பிடிக்காது. சிலர் சங்கடப்படுவார்கள். சிலர் முனகப் பிடித்தாலும் தனது குரல் எப்படி இருக்குமோ என்னும் தயக்கத்தில் பின்வாங்குவார்கள். செக்ஸில் முனகுதல் பிடிக்குமா என்பதை உங்கள் பார்ட்னரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். பிடிக்கும், ஆனால் முனகத் தயங்குபவர் என்றால் அதற்கான சூழலை உருவாக்கித் தாருங்கள். செக்ஸில் முனகத் தயங்குபவர்கள் அதற்கு முன்னோட்டமாகத் தனக்குப் பிடித்த ஏதோ ஒன்றை ருசித்துச் சாப்பிடும்போது முனகப் பழகலாம். அதில் முனகுதல் இயல்பாகும்போது செக்ஸிலும் உங்களுக்கு முனகுதல் இயல்பாகிவிடும் என்கிறார் நிபுணர் ஏங்கல்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )