கொசு வளர்ப்பவர்கள் ஜாக்கிரதை: வருகிறது வெஸ்ட் நைல் வைரஸ்... எச்சரிக்கும் ரஷ்யா!
West Nile Virus: வெஸ்ட் நைல் வைரஸ் என்ற நோய் தற்போது வேகமெடுத்து வருவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் உலகம் விடுபடவில்லை.
வெஸ்ட் நைல் வைரஸ் என்ற நோய் தற்போது வேகமெடுத்து வருவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் ரஷ்யா விடுபடவில்லை. அதற்குள் வெஸ்ட் நைல் வைரஸ் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் தற்போது இளவேனில் காலம் நிலவுகிறது. இக்காலத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் மேலும் பரவுவதற்கான இதமான சூழல் நிலவுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அதுவும் குறிப்பாக காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தட்பவெட்பம் மாறுபாடுகள் வெஸ்ட் நைல் வைரஸ் பரவக் கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இது தொடர்பாக ரஷ்யாவின் மருத்துவ இதழில், "நீண்ட கதகதப்பான பருவநிலையால் வெஸ்ட் நைல் வைரஸ் வேகமாகப் பரவுக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தோன்றியது ஆப்பிரிக்காவில் தான், ஆனால் இப்போது ஐரோப்பாவிலும் இருக்கிறது. ஆசியா, வட அமெரிக்கா நாடுகளிலும் பரவி உள்ளது. ரஷ்யாவில் 80%க்கும் மேலான பாதிப்பு நாட்டின் தென்மேற்கு பகுதியில்தான் காணப்படுகிறது.
வெஸ்ட் நைல் வைரஸ் என்றால் என்ன?
அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வெஸ்ட் நைல் வைரஸ் West Nile virus (WNV) என்பது கொசு மூலம் பரவும் நோய். இது அமெரிக்காவிலும் கொசுவால் பரவும் நோய்களில் முதன்மையானதாக இருக்கிறது. தொற்று உள்ள கொசு மற்றவர்களைக் கடிப்பதால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த வைரஸ் ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்க நாடுகளிலும் இந்த பாதிப்பு இருக்கிறது.
இதனால் மிக மோசமான நரம்பியல் பாதிப்புகள் ஏற்படலாம். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோருக்கு எவ்வித அறிகுறிகளும் தோறுவதில்லை. இந்த வகைக் கொசுக்கள் கோடைகாலத்தில் தான் உற்பத்தியாகின்றன. இந்த நோயைத் தடுக்க தடுப்பூசி இல்லை. சிகிச்சையும் கூட அறிகுறிகளைப் பொறுத்தே அளிக்கப்படுகிறது. வெஸ்ட் நைல் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் ஒருவருக்குத் தான் காய்ச்சல் ஏற்படுகிறது. 150ல் ஒருவருக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிர்க்கொல்லி நோயாகிறது. வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது நலம். முழுக்கைச் சட்டை அணியலாம்.
வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்கு, தலைவலி, காய்ச்சல், உடம்பு வலி, முட்டு வலி, வாந்தி, வயித்தோட்டம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
150ல் ஒருவருக்கு மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளது. மூளைக் காய்ச்சல், மெனின்ஜிட்டிஸ் எனப்படும் மூளை அழற்சி நோய் ஏற்படுகிறது.
வெஸ்ட் நைல் வைரஸால், மிக தீவிர நோய் பாதிப்பு எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படுகிறது. ஆனாலும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. புற்றுநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கும் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு மிகுதி. தீவிர பாதிப்பில் இருந்து குணமடைய பல வாரங்கள், மாதங்கள் ஆகின்றன. வெஸ்ட் நைல் வைரஸ் தீவிர பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மருத்துவமனையில் தங்கவைத்து சிகிச்சையளிப்பது அவசியமாகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )