Heart Attack: இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட காரணம்? மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் வழிமுறைகள்
இளைஞர்களுக்கு அதிகமாக மாரடைப்பு ஏற்பட என்ன காரணம் என்பது குறித்தும், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கும் வழிமுறைகள் குறித்தும் பார்க்கலாம்.
இதயத்தின் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதே மாரடைப்பு எனப்படுகிறது. மாரடைப்பு (MI) ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு ஒரு பிரச்சினையாக கருதப்பட்டது. 40 வயதிற்குட்பட்ட ஒருவருக்கு மாரடைப்பு என்பது மிகவும் அரிதானதாக இருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு ஐந்து மாரடைப்பு நோயாளிகளில் ஒருவர் 40 வயதிற்குட்பட்டவர் என கூறப்படுகிறது. மாரடைப்பு ஏற்படுவது மிகவும் பொதுவானது என கூறப்படுகிறது.
2000 மற்றும் 2016 க்கு இடையில், 20-கள் அல்லது 30-களின் ஆரம்பத்தில், இளம் வயதினருக்கு மாரடைப்பு விகிதம் ஒவ்வொரு ஆண்டும் 2% அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கரோனரி இதய நோய் (CHD) மற்ற சிக்கல்களுடன் சேர்ந்து, மாரடைப்பு (MI) ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நோய் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு MI-ன் பொதுவான காரணங்கள்
மோசமான வாழ்க்கை முறை
அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல்
அதிக எடை
மன அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம், மற்றும்
சர்க்கரை நோய்
புகைபிடித்தல், உடல் பருமன், உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் இருதய அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் பிற காரணங்களால் இளம் வயதினருக்கு கரோனரி இதய நோயின் பாதிப்பு மெதுவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதயம் மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். இது இல்லாமல் உடல் இயங்காது. ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் தடுக்கப்படும்போது, அது இரத்த ஓட்டத்தை குறுக்கிடுகிறது அல்லது முழுமையாக நிறுத்துகிறது. இதன் விளைவாக மாரடைப்பு ஏற்படுகிறது என சொல்லப்படுகிறது.
எம்ஐ கண்டறிதல்
இது மாரடைப்பு தான் (MI) என்பதை உறுதிப்படுத்த, இதய பரிசோதனை நிபுணர் உங்கள் அறிகுறிகளின் மருத்துவ வரலாற்றை, இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு விகிதம், ECG, எக்கோ கார்டியோகிராபி மற்றும் ட்ரோபோனின் சோதனை போன்ற மருத்துவ பரிசோதனை மூலம் ஆராய்வார். உங்கள் இதய பாதிப்புடன் தொடர்புடைய சாத்தியமான ஆபத்து காரணிகளை அறிய, முழுமையான பரிசோதனை அவசியம்.
இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் சில குறிப்புகள்
நார்ச்சத்து நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்
சோடியம் மற்றும் உப்பை குறைக்க வேண்டும்
பேக் செய்யப்பட்ட உணவை தவிர்க்கவும்
உங்கள் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்த அளவுகள் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றை கண்காணிக்கவும்
புகைபிடிப்பதை விட்டுவிட வேண்டும்
சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும்
கடுமையான MI என்பது ஒரு தீவிரமான நிலை, மேலும் இளம் வயதினரிடையே ஏற்படும் எச்சரிக்கை அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சிறிது விழிப்புணர்வு, சுய பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம், இந்த கொடிய நோயின் அபாயத்தைத் தவிர்க்கலாம் என கூறப்படுகிறது.
(இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.)
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )