What is Nipah Virus: அச்சுறுத்தும் நிபா: நிபா வைரஸ் என்றால் என்ன? அறிகுறிகள், பரவும் முறை, தடுப்பது எப்படி?
Nipah Virus Causes, Symptoms: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்ட நிலையில், நிபா வைரஸ் தொற்று குறித்தும் பரவல் மற்றும் சிகிச்சை முறை குறித்து காண்போம்.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இறந்தவருடன் தொடர்புடையவர்களிடம் சோதனை மேற்கொண்டதில், இன்று மேலும் 2 நபருக்கு தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தருணத்தில், நிபா வைரஸ் என்றால் என்ன.? எப்படி பரவுகிறது.? தடுக்கும் வழிமுறைகள் என்ன? மற்றும் சிகிச்சைகள் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
நிபா வைரஸ்:
நிபா வைரஸ் என்பது ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும். அதாவது வைரசானது விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் பரவுகிறது. இது Paramyxoviridae என்கிற குடும்பத்தைச் சேர்ந்த RNA வைரஸ் வகையாகும்.
பரவும் முறைகள்:
இந்த தொற்றானது வைரஸ் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட வெளவால்கள், விலங்குகள் (பன்றிகள், குதிரைகள் போன்றவை) அல்லது மனிதர்களுடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம் வைரஸானது பரவுகிறது
அறிகுறிகள்:
நிபா வைரஸ் தொற்றானது பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. அவற்றுள் சில இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காய்ச்சல்
- தலைவலி
- தொண்டை புண்
- இருமல்
- சுவாச பிரச்சனைகள்
- மூளை அழற்சி
- கோமா
- எங்கெல்லாம் உள்ளது?
நிபா வைரஸ் தொற்று பாதிப்பானது முதன்முதலில் 1998 இல் மலேசியாவின் சுங்கை பகுதியில் கண்டறியப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இது பன்றிகள் மற்றும் வௌவால்களின் வாழ்விடங்களில் இருந்து பரவியதாக கூறப்பட்டது. இந்த தொற்றானது வங்காள தேசம், இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிபா வைரஸ் பாதிப்புகள் உள்ளன.
சிகிச்சை:
நிபா வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஆரம்பகால நோயறிதல் மற்றும் ஆதரவான பராமரிப்பு மூலம் குணப்படுத்தலாம் என மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தடுக்கும் வழிமுறைகள்
வெளவால்கள், விலங்குகள் மற்றும் நிபா தொற்று பாதிப்பு உள்ள நபர்களுடன் நேரடித் தொடர்பைத் தவிர்க்கவும்.
- விலங்குகள் அல்லது மாதிரிகளைக் கையாளும் போது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தவும்.
- அடிக்கடி கிருமி நாசினிகளை கொண்டு கைகளை கழுவவும்.
- பச்சையாகவோ அல்லது சமைக்கப்படாத அசைவ உணவுப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு:
கேரள மாநிலத்தில் நிபா தொற்று பரவலை தொடர்ந்து தமிழ்நாட்டு எல்லைப்பகுதியான தேனி மாவட்டத்திலிருந்து கேரளா பகுதிக்கு குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய வழியாக வாகனங்களில் வரும் பொது மக்களையும் பயணிகளையும் தீவிரமாக பரிசோதனை செய்த பின் அனுமதித்து வருகின்றனர். போடிமெட்டு வழியாக கேரளா செல்லும் முந்தல் சோதனை சாவடி அருகே பொது சுகாதாரத்துறை சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு போடிமெட்டு வழியாக போடிக்கு வரும் பயணிகளையும் பொதுமக்களையும் காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா என சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் வாகனங்களுக்குநோய் தடுப்பு மருந்துகளை தேய்த்தபின் உள்ளே நுழைய அனுமதித்து வருகின்றன. மருத்துவமுகாம் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இங்கு முகாமில் பணி புரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரத் துறை அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )