மேலும் அறிய

"பாதம் பாதுகாப்பு திட்டம்" நீரிழவு நோய் பாதிப்பில் கால் இழப்பை தடுக்க தமிழ்நாடு அரசு அரசாணை

நீரிழிவு நோயால் கால் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலான திட்டத்துக்கு, அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அரசு "பாதம் பாதுகாப்போம் திட்டத்தின்" கீழ் பாத மருத்துவ மையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

பாதம் பாதுகாப்போம் திட்டம்:

நீரிழிவு நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வை பயணத்தில் 'பாதம் பாதுகாப்போம் திட்டம்" அரசின் ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தினை அரசு மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இத்திட்டம் நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை தவிர்பதற்கும் நீரிழிவு பாத பாதிப்புகளுக்கான மருத்துவத்தின் மூலமாக, கால் இழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கு வழிவகை செய்கிறது. தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமாகிய "மக்களைத் தேடி மருத்துவம்" நோய்களை தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மாநிலத்தின் முதன்மையான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இத்திட்டம் கட்டமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பாத மருத்துவ சேவைகளை 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது நாட்டிலேயே இது போன்ற முன்னெடுப்பை அரசு மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு: 

பத்து கோடிக்கும் அதிகமான நோயாளிகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியாவில் 25 சதவிகிதத்தினர் பாத பாதிப்புகளால் அவதியுறுவதும், இவர்களில் 85 சதவிகிதத்தினர் கால்களை இழக்க நேரிடுவதும் ஒரு தேசிய பேரிடர் ஆகும். தமிழ்நாட்டில் 80 லட்சம் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நீரிழிவு பாத பாதிப்புகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிடில் ஆபத்தான பின்விளைவுகளும், கிருமி தொற்று மற்றும் கால்களை இழக்கும் அபாயமும் நேரிடுகிறது. 85 சதவிகித நீரிழிவு தொடர்பான கால் அகற்றல்கள் (Amputations) காலத்தே கண்டறியப்பட்ட நோய் அறிகுறிகள் மற்றும் இடையீட்டுகளின் மூலம் முற்றிலும் தவிர்க்கக்கூடியவை ஆகும். 

80 லட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்த இலக்கு:

பெருகி வரும் இப்பிரச்சினையில் தீவிரத் தன்மையை கண்டறிந்து இதைக் களைவதற்கான முன்னெடுப்பாக பாதம் பாதுகாப்போம் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 80 லட்சம் நீரிழிவு நோயாளிகள் பாத பரிசோதனைக்கு உட்படுத்த இலக்கு நிர்ணயித்து திட்டமிடப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாத உணர்விழப்பு மற்றும் இரத்த நாள அடைப்புகளை கண்டறிந்து மருத்துவ நெறிமுறைகள் அடிப்படையிலான ஆரம்ப நிலை இடையீட்டுகளை மேற்கொண்டு கால் இழப்புகளை தடுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

"பாதம் பாதுகாப்போம் திட்டம்" நீரிழிவு பாத மருத்துவத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து தேவையற்ற கால் இழப்புகளை தடுத்து நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட விழைகிறது. எந்த ஒரு நீரிழிவு நோயாளியும் பாதிக்கப்படக் கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கென ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2, 336 ஆரம்ப சுகாதார நிலையங்கள். 299 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத பாதிப்பு கண்டறிதல் மையங்களை நிறுவ உள்ளது. 

பாத மருத்துவ மையங்கள்:

மேலும் 100 அரசு மருத்துவமனைகள், 21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும் பாத மருத்துவ மையங்கள் மற்றும் 15 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான வசதிகளை நிறுவுவதன் மூலமாகவும் இத்திட்டம் பாத பராமரிப்பு, கால் புண் தவிர்த்தல், கால் புண் மருத்துவம், நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு அம்சங்களையும் ஒருங்கிணைக்கின்றது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
Embed widget