Sperm Quality: ஆண்களுக்கு அதிர்ச்சி தகவல் : காற்று மாசுபாட்டால் விந்தணுக்களுக்கு இந்த நிலைமையா?
காற்று மாசுபாடு விந்தணுக்களில் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆண்களின் கருவுறுதலை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று ஜமா நெட்வொர்க் வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
காற்று மாசுபாடு விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 33,876 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், காற்று மாசுபாடு ஆண்களின் கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்குகிறது. 30,000-க்கும் மேற்பட்ட ஆண்களிடமிருந்து விந்து தர தரவுகளைப் பயன்படுத்துவதால், காற்று மாசுபாட்டிற்கும் விந்து தரத்திற்கும் இடையே உள்ள தொடர்பு உண்மையானது என்று ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறினார்.
காற்று மாசுபாடு விந்தணுக்களில் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆண்களின் கருவுறுதலை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று ஜமா நெட்வொர்க் வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வு பற்றி
ஆய்வறிக்கையின்படி, இந்த கண்டுபிடிப்புகள் சுற்றுப்புறத் துகள்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்கவும், ஆஸ்தெனோ சோஸ்பெர்மியாவின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என்று கூறுகின்றன.
33,876 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் காற்று மாசுபாடு ஆண்களின் கருவுறுதலை எவ்வாறு பாதிக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. உலகம் முழுவதும் மாசுபாடு அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்த ஆய்வு தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானதாக இருக்கிறது.
இந்த ஆய்வு குறித்து ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஆண்ட்ரோலஜி பேராசிரியர் ஆலன் கூறுகையில், “காற்று மாசுபாடு மற்றும் விந்து தரம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பின் சாத்தியம் பல ஆண்டுகளாக பல ஆய்வுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனைவரும் இந்த முடிவுக்கு உடன்படவில்லை.
மேலும் இது 30,000-க்கும் மேற்பட்ட ஆண்களின் விந்து தரத் தரவைப் பயன்படுத்துவதால் சுவாரஸ்யமாக உள்ளது. ஆனால் விந்தணுக்களின் இயக்கம் குறைவதற்கான அளவு மிகவும் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது ” என்று கூறினார்.
விந்தணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க
விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மூன்று முக்கிய காரணிகள் தீர்மானிக்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றின் சேதம் ஆண்களின் மூலமாக நடக்கவேண்டிய கருவுறுதலைக் குறைக்கும்.
காரணிகள்:
* விந்தணு எண்ணிக்கை: இது விந்து வெளியேறும் விந்தணுக்களின் எண்ணிக்கையை உள்ளடக்கியது. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.
* விந்தணு இயக்கம்: இது பெண்ணின் கருப்பை வாய், கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்கள் வழியாக செல்லவும் மற்றும் கருவுற முட்டையை அடையவும் விந்தணுவின் திறன் ஆகும். விந்தணுக்களின் இயக்கம் குறைவாக இருப்பது கருவுறுதலைக் குறைக்கும்.
* விந்தணு அமைப்பு: விந்தணு உருவவியல் என்றும் அழைக்கப்படுகிறது. இது விந்தணுவின் சரியான அமைப்பை உள்ளடக்கியது. இது இயக்கத்திற்கு உதவும். ஒரு சிறந்த அமைப்பு சிறந்த விந்தணு தரத்தை குறிக்கிறது.
விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான டிப்ஸ்
* பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் வராமல் இருக்க பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளுங்கள்.
* புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துவதை தவிர்க்கவும்.
* வழக்கமான உடல் செயல்பாடுகளுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பராமரிக்க வேண்டும்.
* உடல் பருமன் ஏற்படுவதைத் தவிர்க்க உங்கள் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
* உங்கள் விந்தணு ஆரோக்கியத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப மேம்படுத்த ஒரு சுகாதார நிபுணரை அணுக வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )