பாத்ரூம் செக்ஸ் வைப்பவரா... கொஞ்சம்... இல்லை இல்லை.. ரொம்ப கேர்புள் என்கிறார்கள்!
ஆனால் குளியலறையில் உடலுறவு ஆபத்தானதா? பாதுகாப்பானதா? தண்ணீரில் ஜலதோஷம் பிடிக்குமே? தடுக்கிவிழுந்துவிட்டால் என்ன செய்வது என்பது போன்ற வெளியே கேட்கமுடியாத கேள்விகள் நிறையவே இருக்கும்.
படுக்கையில் மட்டுமெ செக்ஸ் என்பது ஒரு கட்டத்துக்கு மேல் கடமை போல மாறி போரடித்துவிடும். அப்போது தங்களுடைய செக்ஸ் லைஃபை சுவாரசியமாக்கிக்கொள்ள படுக்கையறை இல்லாத வீட்டின் மற்ற இடங்களில் உடலுறவு கொள்ளலாம் எனப் பொதுவாகவே அட்வைஸ் செய்வார்கள் பாலியல் நிபுணர்கள். இதில் பாத்ரூம் செக்ஸ் அட்வென்ச்சர் விரும்பும் பார்ட்னர்களுக்கு ஜாலி அனுபவமாக இருக்கும், கூடவே படுக்கையறையில் கூடக் கிடைக்காத ப்ரைவசியும்... ஆனால் குளியலறையில் உடலுறவு ஆபத்தானதா? பாதுகாப்பானதா? தண்ணீரில் ஜலதோஷம் பிடிக்குமே? தடுக்கிவிழுந்துவிட்டால் என்ன செய்வது என்பது போன்ற வெளியே கேட்கமுடியாத கேள்விகள் நிறையவே இருக்கும். அதற்கான விளக்கத்தை அளிக்கிறார் பாலியல் நிபுணர்.
சுவரா? தரையா?
படுக்கையறையில் மட்டுமே உடலுறவு கொண்டு பழக்கப்பட்டவர்களுக்கு பாத்ரூமில் எப்படி...? தரையிலா? என்று தலையைச் சொறிவது புரிகிறது. ஆனால் உடலுறவுக்கு ஏற்றது குளியலறைச் சுவர்தான். சுவர் மீது சாய்ந்து உடலுறவு கொள்ளும்போது கீழே வழுக்கிவிழும் வாய்ப்புகள் குறைவு மேலும் நின்றபடியே உடலுறவு கொள்வதால் நீண்ட நேரம் கிடைக்கும் என்கிறார் பாலியல் நிபுணர்.
நின்றபடிச் சரிவராதா அப்படியென்றால் இதனை முயற்சிக்கலாம்...
நின்றபடியே உடலுறவு சரிவராது என நினைப்பவர்கள் குளியலறை சிங்க்குகளைத் தேர்ந்தெடுக்கலாம். இதுவும் கீழே விழுந்துவிடுமோ அல்லது கைகால் எலும்புகளில் அடிபடுமோ என்கிற அச்சத்தைக் குறைத்து பார்ட்னர்கள் இருவருக்கும் ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுக்கும் என்கிறார்.
ஷவர் குளியல் செக்ஸ் சம்பவமாகாமல் சக்ஸஸ் ஆவது எப்படி?
தமிழ் சினிமாக்கள் ஷவர் குளியல் உடலுறவை அழகாகக் காண்பித்தாலும் நிஜ வாழ்க்கை சினிமா போல இருப்பதில்லை ஷவர் குளியலில் வழுக்கி விழுந்த ஜோடிகள் நிறைய உண்டு. வழுக்காத வகையிலான மேட்களை(Mat) இந்தச் சமயங்களில் உபயோகிக்கலாம். அவை வழுக்கும் தரையிலிருந்து தப்பிக்க
உதவும்
லூப்ரிகன்ட்களைப் பயன்படுத்தவும்
குளியலறையில் ஷவருக்குக் கீழ் உடலுறவு கொள்வதால் பிறப்புப்புறுப்பில் ஏற்படும் வறண்ட நிலையைத் தவிர்க்கலாம் என பல ஜோடிகள் தவறான புரிதலில் இருப்பார்கள். அது தவறு.மேலும் நின்றபடியே உடலுறவு கொள்வது உடலுறவினைச் சில நேரங்களில் கடினமானதாக்கும் அந்த நேரங்களில் லூப்ரிகன்ட்களைப் (Lube) பயன்படுத்துவது நல்லது.
கைப்பிடிகள் கவனம்!
குளியலறைக் கதவுப்பிடிகள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளச் சொல்கிறார் பாலியல் நிபுணர். ஒருவேளை வழுக்கினால் கூட கைகளால் கைப்பிடியைப் பிடித்துக்கொள்ளலாம் கீழே விழுவதிலிருந்து தப்பிக்கலாம் என்பது அவரது அட்வைஸ்.
பாத் டப்களைப்(Bathtub) பயன்படுத்தலாம்:
பாத் டப்கள் எல்லோர் வீட்டிலும் இருப்பதில்லை. அப்படி பாத்டப்கள் குளியலறையில் இருக்கும்போது அதனையே உடலுறவுக்குப் பயன்படுத்தலாம் என்கிறார் பாலியல் நிபுணர். தரை அழுக்காக இருக்குமே, கிருமிகள் இருக்குமே என்கிற தயக்கம் பாத் டப்கள் இருக்கும் குளியலறைக்குத் தேவையில்லை.
Also Read: ‛தவறு ஆடையில் இல்லை..அதைப் பார்க்கும் கண்ணில் தான்...’ பிகினி உடையில் ‛டிடி’ பிலாசபி!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )