Guava Leaves : என்னது.. பல் வலிக்கு தற்காலிகமா நிவாரணம் அளிக்குதா கொய்யா இலை.. எப்படி?
பல் வலி வந்தால் படாதபாடாய் படுத்திவிடும். அதுவும் இரவைக் கடப்பதற்குள் யுகத்தைக் கடப்பதுபோல் ஆகிவிடும்.
பல் வலி வந்தால் படாதபாடாய் படுத்திவிடும். அதுவும் இரவைக் கடப்பதற்குள் யுகத்தைக் கடப்பதுபோல் ஆகிவிடும்.
சில நேரங்களில் என்ன செய்வதென்றே தெரியாது. அதுமாதிரியான சூழலில் உடனடியாக கைக்கு கிடைக்கும் நிவாரணி தான் கொய்யா இலை.
கொய்யா இலைகளில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி பாக்டீரியா எதிர்ப்பு, நார்ச்சத்து வைட்டமின் சி போன்றவை உள்ளன. குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் குறைக்க உதவுகிறது. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.
இதில் உள்ள ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் பல் வலிக்கு நிவாரணியாக அமையும்.
பல் வலிக்கு கொய்யா இலைகளை எப்படிப் பயன்படுத்துவது?
பல் வலிக்கு கொய்யா இலையை பயன்படுத்த சில வழிமுறைகள் உள்ளன. கொய்யா இலையை மையாக அரைத்து அதிலிருந்து சாறை எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
செய்முறை:
கொய்யா இலைகள் சில
சிறிதளவு கிராம்பு
உப்பு
இவற்றை மையாக நீர் விட்டு அரைக்கவும்
பின்னர் அதை பற்களில் தேய்த்துவிடவும்
இதனால் பல் வலி குறையும்.
1. ஆன்டி பாக்டீரியல் (பாக்டீரியா எதிர்ப்பு)
பல் வலிக்கு நிவாரணம் பெற இந்த பேஸ்டை பயன்படுத்தலாம். இது பற்களுக்கு இடையே உள்ள கிருமிகளைக் கூட அகற்றும். அதேபோல் பற்களில் வளரும் புழுக்களை கட்டுப்படுத்தும். பல் வலி வெகுவாகக் குறையும்.
2. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் நிறைந்தது (வீக்கத்துக்கு எதிரான பண்புகள்)
இந்த பண்பால் வீக்கம் குறைந்து வலி நிவாரணம் கிடைக்கும். இது சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொற்றை நீக்கும். பல் வலிக்கு நல்ல கை வைத்தியம் கொய்யா இலை சாறு
செரிமான கோளாறு உள்ளவர்கள் ஐந்து கொய்யா இலையையும் கொஞ்சம் சீரகமும் சேர்த்து கொதிக்க வைத்துப் பருகினால் உடனடியாக வயிறு உப்புசம் குறைந்து உணவு சீரணமடையும். உணவு ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய பாதிப்பும் குறையும்.
கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் சுரப்பியினைத் தூண்டி சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் உள்ளீர்ப்பை தடுக்கிறது, மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து அலச வேண்டும். கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
கொய்யா இலையைக் கொதிக்க வைக்கும்போது சிறிதளவு துளசியும், இஞ்சியையும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால், மூச்சுக்குழாய் அலர்ஜி நீங்கும்.
கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் எடை குறைவதை காணலாம்.
இதுபோல் கொய்யா இலையால் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )