மேலும் அறிய

Bubonic Plague: 5 கோடி மக்களை கொன்ற கொடூர நோய்.. அமெரிக்காவில் மீண்டும் புபோனிக் பிளேக்.. அறிகுறிகள் என்ன?

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் புபோனிக் பிளேக் என்றால் நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் புபோனிக் பிளேக் என்ற அரிய நோயால் (Rare Case Of Bubonic Plague) பாதிக்கப்பட்ட நபர் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக 2015 ஆம் ஆண்டு இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட நபருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வளர்ப்பு பூனை மூலம் இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது வரை ஒருவருக்கு மட்டுமே இந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் கருப்பு மரணம் (Black Death) என்று அழைக்கப்படும் பிளேக் நோய் பரவியது. மனித வரலாற்றில் மிகக் கொடிய தொற்று நோய்களில் ஒன்றான புபோனிக் பிளேகால் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

புபோனிக் பிளேக் என்பது பாலூட்டிகளை பாதிக்கக்கூடிய ஒரு தொற்று நோயாகும். பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்று நோயை ப்ளேக் என்று அழைக்கப்படுகிறது. யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியா மூலம் ப்ளேக் தொற்று நோய் உருவாகிறது. இந்த வகை பாக்டீரியா விலங்குகளில் வாழும். குறிப்பாக அணில் போல காட்சியளிக்கும் ரோடண்ட் என்ற வகை விலங்குகளிலும், அதன் உடலில் உள்ள உண்ணிகளிலும் இந்த பாக்டீரியா அதிகம் காணப்படுகிறது. இது மனிதர்களுக்கு எளிதாக பரவக்கூடியது. குறிப்பாக புபோனிக் பிளேக் என்பது பொதுவாக பரவக்கூடிய நோய்களில் ஒன்றாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதங்கள், விரல்கள் போன்ற உடல் பாகங்கள் கருப்பாக மாறிவிடும் என்பதால், இதனை `தி பிளாக் டெத்` என அழைக்கப்படுகிறது.

காய்ச்சல், குமட்டல், பலவீனம், குளிர் மற்றும் தசை வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என்றும் கூறப்படுகிறது. புபோனிக் பிளேகை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் நுரையீரலை பாதிக்கும் நிமோனிக் பிளேக் அல்லது ரத்த ஓட்டத்தில் தொற்றை உண்டாக்கும் செப்டிசிமிக் பிளேக் ஆகியவையை உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: நரம்பை உள்ளே வைத்து தைத்ததால் 15 ஆண்டுகள் ஆசிரியைக்கு நரக வேதனை!
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: நரம்பை உள்ளே வைத்து தைத்ததால் 15 ஆண்டுகள் ஆசிரியைக்கு நரக வேதனை!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
Embed widget