மேலும் அறிய

’காய்ச்சல் மருந்து தட்டுப்பாடா? இந்த நம்பருக்கு போன் போடுங்க’ - அமைச்சர் சொன்ன தகவல்!

குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு அமைச்சர் மா. சுப்ரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருந்தால் 104 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் எனவும், குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில், மருந்துகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்தினார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு என்கிற அளவில் தொடர் செய்திகள் வெளியாகி வருகிறது. இது தவறான செய்தி என்று பலமுறை தெரிவித்திருந்தாலும் கூட மீண்டும் இது போன்ற செய்தி வருவகிறது. இதனால் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அப்படி ஆய்வு மேற்கொள்ளும் பொழுது மருத்துவமனையில் உள்ள மருந்து கிடங்கைதான் முதலில் ஆய்வு மேற்கொள்கிறோம். எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. இது போன்ற குற்றச்சாட்டை சிலர் தேவை இல்லாமல் தெரிவித்து வருகிறார்கள். நிர்வாக ரீதியாக ஒரு சிலர் பணியிடை மாற்றம் செய்து இருக்கிறோம், அப்படி பணியிடம் மாற்றம் செய்தவர்கள் அரசின் மீது உள்ள கோபத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திற்கு தேவையான அத்தியாவசிய 327 மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது.  இதற்கு முன்பு வரையிலும் 32 இடத்தில் மட்டும் தான் மருந்து கிடங்து என்பது இருந்தது, தற்போது நான்கு மருத்துவ கிடங்குகள் புதிதாக அமைக்கப்பட்டு, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாவட்டம் தோறும் மருந்து கிடங்கு என்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது. உக்ரைன் போர் காரணமாகவும், பெட்ரோல் மூலப்பொருள் விலையேற்றத்தால் சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருந்தது உண்மை தான் அவை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது என்ற செய்தியும் வெளியாகி வருகிறது. அந்த திட்டத்திற்கென்று தேவைப்படும் 32 வகையான மருந்துகள் அந்தந்த மாவட்ட மருந்து கிடங்கில் 3 அல்லது 4 மாத காலத்திற்கான இருப்பு வாங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாடு இருக்கிறது என்று செய்தி வெளியிட வேண்டும் என்றால் மருந்து கிடங்கை வந்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்குகிறோம். பொது மக்கள் அப்படி மருந்து தட்டுப்பாடு இருந்தால் 104 புகார் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு மரபணு சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கு சிறப்பு நிலை ஆணை ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த மருத்துவமனையில் மரபணு வியாதிகள் கண்டுபிடித்தல், சிறப்பு சிகிச்சைகளை அளித்தல், சிறப்பு கவுன்சிலிங் தருதல், மரபணு வியாதிகளின் பிறப்பைத் தடுத்தல், சிறப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகள் நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் விரிவுப்படுத்தப்படும்.

பருவ மழைக்கு முன்னால் வரும் காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளுக்கு வரக்கூடியது தான், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் காய்ச்சல் பாதிப்பு பெரிதாக தெரியவில்லை ஆனால் எப்போதும் ஏற்படக்கூடிய பாதிப்பு தான் தற்போதும் ஏற்பட்டுள்ளது.  இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் எச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தாமக 965 பேர் எச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரையிலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. அதேபோல பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் இல்லை. மருந்து சீட்டு இல்லமால் எந்த மருந்தும் கொடுக்க கூடாது என்று மருந்து கடைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பொதுமக்களும் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget